நிறுவனம்:பாதிப்புற்ற பெண்கள் அரங்கம்

From நூலகம்
Name பாதிப்புற்ற பெண்கள் அரங்கம்
Category அரச சார்பற்ற நிறுவனம்
Country இலங்கை
District அம்பாறை
Place அக்கரைப்பற்று
Address இராமகிருஸ்ண மிசன் றோட், அக்கரைப்பற்று -08. அம்பாறை
Telephone 0672278237
Email awfsrilanka7@gmail.com
Website

அம்பாறை, அக்கரைப்பற்று -08, இராமகிருஸ்ண மிசன் றோட்டில் பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் அமைந்துள்ளது. 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள இந்த அரச சார்பற்ற நிறுவனம். பெண்களின் பல பிரச்சினைகள் கருத்திற் கொண்டு பல சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக பாரிய இடப்பெயர்வு, வாழ்வு மற்றும் உடமைகளை இழந்த நிலைமை காணப்பட்டது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அம்பாறை மாவட்டத்தில் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான கட்டமைப்பு பொறிமுறைகளை உருவாக்கி வலுப்படுத்துவதற்கான இலகுப்படுத்தல், சட்ட அறிவுரை வழங்கல் என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கிவருகின்றது பாதிப்புற்ற பெண்கள் அரங்கம். கணவனை இழந்த பெண்கள், அங்கவீனமுற்ற, காணாமல்போன அல்லது தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டமை காரணமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், கணவனை இழந்த குடும்பங்கள், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களும் சிறுமியர்களையும் பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் முக்கியமானதாக கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மகாசக்தி சமூக மட்ட நிறுவனத்தில் ஒரு பகுதியாக 1994ஆம் ஆண்டு பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான சட்ட அறிவுரை வழங்கல் என்பற்றை குறிக்கோளாகக் கொண்டு பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் உருவாக்கப்பட்டு ஆலையடி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டது. 1996ஆம் ஆண்டு மகாசக்தி நிறுவனத்தில் இருந்து பிரிந்து பல திட்டங்களை முன்னெடுத்தது. குறிப்பாக கிராம மட்ட பெண்கள் குழுக்களும், யுவதிகள் வட்டமும் நெதர்லாந்து தூதரகத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. மற்றும் சிறுகடன் வழங்கல் நிகழ்த்தித் திட்டம் பெண்களிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பால்நிலை சமத்துவமும் சமூக நீதியும் கொண்ட சமூகம், கிழக்கு மாகாண பெண்கள் கௌரவத்துடனும், மரியாதையுடனும் சமமான மனிதர்களாக வாழ்வதற்கு சாத்தியமான சூழலினை உருவாக்குதல் பாதிப்புற்ற பெண்கள் அரங்க அமைப்பின் இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறது.