நிறுவனம்:சம்பூர் பத்திரகாளி அம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:49, 2 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சம்பூர் பத்திரகாளி அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சம்பூர்
முகவரி சம்பூர் பத்திரகாளி அம்மன் ஆலயம், சம்பூர், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருகோணமலையின் எல்லைப்புற பத்திரகாளி அம்மன் ஆலயங்களில் சம்பூர் பத்திரகாளி அம்மன் ஆலயமும் ஒன்றாகும். இது திருக்கோனேச்சர ஆலயத்துடன் சம்பந்தம் உடையதாக காணப்படுகின்றது. இந்த ஆலயத்தில் உள்ள பத்திரகாளி தாய் தானே விரும்பி காட்டுத் தென்னை மரத்தின் கீழ் அமர்ந்து சம்பூர் எனும் தமிழ் கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் குளக்கோட்டும் மன்னனுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது என்பது "கவிராயர் அருளிச்செய்த கோனேச கல்வெட்டு என வழங்கும் கோணேசர் சாசனம்" என்பதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த சாசனம் 16ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகும்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திலிருந்து திருக்கோணேஸ்வர பெருமானுக்கு சிவ தோத்திரம் ஓதும் திருப்பணிக்காக குளக்கோட்டு மன்னனினால் சிவசித்திரப் பெருமாள் புலவன் தலைமையிலான குடிமக்கள் அழைத்துவரப்பட்டு அவர்கள் குடியேற்றப்பட்ட கிராமமே சம்பூர் கிராமம் என அறியப்படுகின்றது. சம்பூர் பத்திரகாளியம்மன் ஆலயம் தொடர்பான அரிய ஆவணங்கள் சில பெட்டகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வந்த போதும், 1964 ஏற்பட்ட பெரும் புயலின் விளைவாக அழிந்து போனதாக பெரியோர் கூறுகின்றனர். திருக்கோணமலை கோணேஸ்வரர் ஆலய திருப்பணிக்காக குளக்கோட்டு மண்ணனால் கொண்டுவரப்பட்ட பத்திரகாளி, பிள்ளையார், வைரவர், பத்தினி அம்மன், செண்பக நாச்சி அம்மன் போன்ற சிலைகள் கொண்டு வந்த ஓடமொன்று கோனேசர் மலையின் தென்கிழக்கு புறத்தில் உள்ள சம்பூரின் கவுளிமுனை கடற்கரை பகுதிக்கு திசை மாறிக் கொண்டுவரப்பட்ட போது, அந்த ஓடம் கல்லாக மாறியதனால் அங்கிருந்த விக்கிரகங்கள் சம்பூரில் மத்தளமலையிலும், சம்பூர் பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும் வைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

சம்பூர் கிராமத்தில் தற்போது உள்ள சிலை சம்பூரில் உள்ள அன்பர் ஒருவருக்கு அம்மன் காணப்படும் இடத்தை இரவு கனவில் தோன்றிக் கூறி காட்டுத் தென்னை மரத்தின் கீழ் வைக்குமாறு கூறியதாக வரலாறு கூறுகின்றது. விக்கிரகத்தைக் கொண்டு வர முற்பட்ட போது "மங்கள மேளதாளம் உடன் நீலப் பாவாடை விரித்து அழைத்தால் வருவேன்" என கூறி மறைந்ததும், அம்பாளை அவ்வாறான ஒரு மேளதாளங்களுடன் அழைத்து வந்து ஆலயத்தில் வைத்துள்ளனர். இந்த ஆலயத்தில் காணப்படும் காட்டுத் தென்னை மரம் ஒன்பதரை அடி மீட்டர் சுற்றளவு உடையதாக தற்போது காணப்படுகின்றது. 1970 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் வரை இந்த ஆலயம் ஆகம முறை சாராதே பூசைகள், வழிபாடுகள் இடம் பெற்று வந்துள்ளது. இவ்விடத்தில் 7 சாடிகளில் விசேட பொங்கல் வைத்து வைரவருக்கு படைக்கப்பட்டு, தவிட்டுக் கொழுக்கட்டை செய்வது தனிச்சிறப்பான விடயமாகும். வாரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டுமே பொங்கல் வழிபாடுகள் இடம்பெறுகின்றன. மார்கழி மாதத்தில் ஆலயத்திற்கு சென்று வழிபடுதல் தவிர்க்கப்பட்டிருந்தது. விலங்கு பலியிடும் சம்பிரதாயம் இந்த ஆலயத்தில் காணப்பட்டது.

குடி வழி பாரம்பரியம் அடிப்படையில் ஆலய நிர்வாகத்தை ஏழுகுடிகளின் தலைவர்கள் நிர்வகித்து வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 12 ஆகா அதிகரித்துள்ளது. அந்த குடிகள் ஆவன திரிய காரியப்பர் குடி, புலவன் குடி, பெரிய காரியப்பர் குடி, இறையாத்துக்குடி, காப்புக்கட்டுக்குடி, திருமஞ்சல் நீர் குடி, இளங்குடி, பசுங்குடி, திரிசெட்டி குடி, வளர் குடி, பாட்டு வழி குடி, சந்தனார் குடி ஆகும். பின்னர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்துடன் ஆலயம் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டு பங்குனி உத்திரத்தன்று கொடியேற்றத்துடன் திருவிழா இடம்பெறுகின்றன.

1600 காலப்பகுதியில் எழுதப்பட்ட சித்திரவேலாயர் காதலெனும் நூலில் சம்பூர் ஆலயம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் காட்டுத் தென்னை மரத்தின் கீழ் காணப்பட்ட அம்பாள் சிலை தவிர்ந்த அவ்வளவு ஆலையமும் சிதைவடைந்த போதும், 2013ஆம் ஆண்டு இருந்து ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, இன்று வழிபாடுகளுடன் வழமை போல் இயங்கி வருகின்றது.


c