நிறுவனம்:கிளி/ கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:00, 24 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= கிளி/கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் கிளிநொச்சி
முகவரி கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

சேர் பொன் இராமநாதன் அவர்களினால் இப் பாடசாலையானது கிளிநொச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை எனும் பெயரில் 1927 ஆம் ஆண்டு கிளிநொச்சி கனிஸ்ட மகா வித்தியாலயம் தற்போது உள்ள இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.nதாடர்ந்து 1963 ஆம் ஆண்டு இப்பாடசாலையானது கிளிநொச்சி மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டதுடன் முதன் முதலாக கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை நிலையமாகவும் செயற்பட்டது. இங்கு க.பொ.த. உயர்தர கலை வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கான அனுமதியானது 1968 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு 1973 ஆம் ஆண்டில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலைக்கென 50 ஏக்கர் காணியானது தற்போது பாடசாலை உள்ள இடத்தில் 1974 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு உயர்தரத்தில் வர்த்தக, விஞ்ஞானப் பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது வர்த்தகத்துறையில் 8 மாணவர்களும் விஞ்ஞானத்துறையில் 4 மாணவர்களும் இணைந்து கொண்டனர்.அக்காலகட்டத்தில் உயர்தரமுள்ள ஒரேயொரு பாடசாலையாக இப்பாடசாலை திகழ்ந்தது.

கிளிநொச்சி மகா வித்தியாலயம் 6-13 வகுப்புக்களுடன் 21.09.1977 அன்று தற்போதைய இடமான ஆனந்தபுரத்தில் நிறுவப்பட்டது. பழைய இடத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு கிளிநொச்சி கனிஸ்ட வித்தியாலயம் என்ற புதிய பெயருடன் செயற்பட ஆரம்பித்தது.1980ஆம் ஆண்டில் ஆரம்பப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. 05.05.0982 அன்றிலிருந்து கிளிநொச்சி கொத்தணிப் பாடசாலைகளின் மூலாதாரப் பாடசாலையாகச் செயற்பட ஆரம்பித்தது.

இப்பாடசாலையானது 1988 ஆம் ஆண்டு கிளிநொச்சியின் முதல்தரப்பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. பின்னர் 15.06.1994 இல் கிளிநொச்சி மத்திய கல்லூரி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக அப்போதிருந்த கல்விப்பணிப்பாளர் திரு.சி.கமலநாதன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

கல்லூரியானது போர்ச்சூழல் காரணமாக 1996 ஆம் ஆண்டு அக்கராயனிற்கு இடம்பெயர்ந்து மீ ண்டும் 2000 ஆம் ஆண்டில் தனது பழைய இடத்தில் இயங்க ஆரம்பித்தது.மீண்டும் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக கல்லூரியானது இடம்பெயர்ந்து தர்மபுரத்தில் இயங்கியது. போர் காரணமாக டிசம்பர் 2008 ஆம் ஆண்டில் பாடசாலையின் முழுச்சொத்ததுக்களும் இழக்கப்பட்டன. தொடர்ந்து 04.08.2011 ஆம் ஆண்டில் இசுறு பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டதுடன் ஆரம்பப்பிரிவானது தனியாக்கப்பட்டு கல்லூரியின் தெற்குப்புற வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தது.

க.பொ.த. உயர்தரத்தில் புதிய பிரிவான தொழினுட்பப்பிரிவு கியிநொச்சி மாவட்டத்தில் முதன்முதலாக15.07.2013 அன்று இக்கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தொடர்ந்து 29.07.2013 இல் இக்கல்லூரி தேசியப்பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.தீவளாவிய ரீதியில் 43 தேசிப்பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்விச்செயற்றிட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் இப்பாடசாலையில் 25.09.2017 அன்று முதன்முதலில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.