நிறுவனம்:அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
வகை சனசமூக நிலையம்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

1919ம் ஆண்டு அரியாலையில் ஆரம்பிக்கப்பட்டதும் சுதேசியதிருநாட்கொண்டாட்டத்திற்கு மூலகாரணமானதுமான இலக்கியக் கழகமே இந்நூல் நிலையத்தினதும் ஆரம்ப உருவாகும் அரியாலை மக்களிடையே பத்திரிகை வாசிப்பு இரசனையையும் கலைவளர்ச்சியையும் வளர்க்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகத்தின் முதலாவது தலைவராக திரு. ஏ. கதிரவேலு பணியாற்றினார். 1919ம் ஆண்டிற்கு முன்பே சரஸ்வதி பாஷா விருத்தி சங்கம் என ஆரம்பிக்கப்பட்டு பின் சரஸ்வதி மத்திய நூல் நிலையமாகி தொடர்ந்து சரஸ்வதி சனசமூக நிலையமாக வளர்ச்சி பெற்று மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. 1947ம் ஆண்டு வரை ஸ்திரமற்ற நிலையில் இயங்கிய இந்நூல் நிலையத்திற்கு நிலையான கட்டிடம் அமைக்கப் பல பெரியோர்கள் முயன்றனர். அவர்களுள் திரு. பரமு தில்லைராசாவும் ஒருவராவார். 1952ம் ஆண்டு இந்நூல் நிலையம் சித்திவிநாயகர் ஆலயக் காணியில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது 1947ம் ஆண்டுக்கு முன்னர் இந்நிலையம் தளர்ந்த நிலையிலிருந்த போதும் அதனைப் புதுமலர்ச்சியடைச் செய்தவர்களில் திருவாளர்கள் சு. தம்பாபிள்ளை, த. சீவரத்தினம், ஆ. இரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். 1965ம் ஆண்டளவில் இந்நிலைய மைதானம் பெருப்பிக்கப்பட்டதுடன் நிலையத்தின் நடவடிக்கைகளும் அதிகரிக்கத் தொடங்கின அரச உதவியுடனும் மக்களது பண அன்பளிப்புடனும் இரண்டு மாடிக்கட்டிடமும் தோழர் விசுவநாதன் திறந்த வெளி அரங்கும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன அத்துடன் பாலர் பாடசாலை, நூல் இரவல் கொடுக்கும் பகுதி, விளையாட்டுப் பகுதி என்பன சிறந்த முறையில் செயற்பட்டுவருகின்றன. மாணவர்களுக்கான இரவு கல்விச்சேவையை வழங்கி வரும் இந்நிலையம் உள்ளக விளையாட்டு வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள நிலையமாகும் சனசமூக நிலையமாக தன்னை பதிவு செய்து கொண்ட இந்நிலையம் 1993ம் ஆண்டில் இருந்து இந்நிலையத்தின் ஆரம்ப அங்கத்தவர்களான திருவாளர் தம்பிப்பிள்ளை பின்னர் இதன் வளர்ச்சிக்கு உதவிபுரிந்த திரு. அ. விசுவநாதன் , I. S. இராசா ஆகியோரது பெயர்களில் இல்லங்களாக பிரித்து இல்ல விளையாடு போட்டிகளை நடத்தி ஆண்டு விழாவை சிறப்புறச் சொய்து வருகின்றது. இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்ட போது பலரது பங்களிப்புடன் அதாவது பனைமரம் மண், கல் என அவரவர் வசதிக்கு ஏற்ப பகுதிபகுதியாக நன்கொடைகள் பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையம் இன்று 2019ல் நூற்றாண்டு விழாவினை கண்டு உச்ச வளர்ச்சி அடைந்து சிறப்புடன் விளங்குகின்றது. அத்துடன் எமது வாசக சாலைக்கு தனிப்பட்ட ஒருவரின் பெயரை சூட்டாது சரஸ்வதி எனும் கலை தாயின் பெயரை சூட்டிய எமது முன்னோரின் தீர்க்கதரிசனமே பல்வேறு கலைகளும் நம்மக்களிடையே விருத்தி அடைவதற்கு இத்திருநாமம் தூண்டுதல் அழிந்து கொண்டு இருக்கிறது என்றால் மிகையாகாது.