நிறுவனம்ːகிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:33, 9 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, நிறுவனங்கள்ː கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் பக்கத்தை [[நிறுவனம்ː கிளி/ இராமநாதபுரம்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் இராமநாதபுரம்
முகவரி இராமநாதபுரம் ,கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

1955 ஆம் அண்டு விவசாயக் குடியேற்றத் திட்டமாக உருவாக்கப்பட்ட இராமநாதபுரம் கிராமத்தில் 1956.05.02 ஆம் திகதி இப்பாடசாலைக்கு இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரோடு திரு ச.நமசிவாயம் அவர்களை அதிபராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய காலத்தில் ஒரு ஆண் ஆசிரியர், இரு பெண் ஆசிரியர்களும் 90 மாணவர்களும் மட்டுமே இருந்தனர்.

1960ல் திரு சங்கரப்பிள்ளை அதிபராக பொறுப்பேற்றார். இவர் கற்றல் செயல்பாட்டுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஊக்கம் காட்டி பாடசாலையில் விளையாட்டு போட்டிகள், விழாக்கள் என்பவற்றை நடத்தி பெற்றோர், மாணவர்கள் மனதில் பாராட்டுக்களை பெற்றார்.

1963 இல் கந்தையா அவர்கள் அதிபராகக் வந்தகாலத்தில் வகுப்புக்கள் தரம் 8 வரை உயர்த்தப்பட்டன. 1964 இல் பொன்னம்பலம் அவர்கள் அதிபராக வந்த காலத்தில் முதன் முதலாக கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சை எழுதி சித்தியும் அடைந்தனர்.

1966ஆம் ஆண்டு பாடசாலை மகாவித்தியாலயம் ஆக தரம் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிளி இராமநாதபுரம் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயர் மாற்றப்பட்டு இராமநாதபுரம் மகாவித்தியாலயம் என்ற பெயரை பெற்றது. பாடசாலையின் கொடியின் நிறம் சிவப்பு. பாடசாலை சின்னத்தில் ஏர், நெற்கதிர், கோபுரம் என்பவற்றை கொண்டதாக அமைந்தது. ஏட்டிற்கும் ஏருக்கும் ஏற்றம் தருவோம் என்பது மகுடவாக்கியமாகும்