நிறுவனம்: விவசாய மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
நூலகம் இல் இருந்து
| பெயர் | விவசாய மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி |
| வகை | மன்றங்கள் |
| நாடு | - |
| மாவட்டம் | - |
| ஊர் | - |
| முகவரி | - |
| தொலைபேசி | {{{தொலைபேசி}}} |
| மின்னஞ்சல் | {{{மின்னஞ்சல்}}} |
| வலைத்தளம் | {{{வலைத்தளம்}}} |
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் விவசாயமன்றமானது தொழில்நுட்பப் பாடங்களில் ஒன்றான விவசாயத்தைக் கற்கும் மாணவர்களிடையே விவசாயச் செயன்முறை அறிவைப்பெருக்கும் நோக்குடன் சுயதொழில், சுய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தல், வீட்டுத் தோட்டச் செய்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், சூழலை அழகுபடுத்தல், பயனுள்ள பொழுதுபோக்கு என்பவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இம்மன்றமானது ஆரம்பிக்கப்பட்டது.
- இம் மன்றமானது ஆரம்பத்தில் விவசாயக் கழகம் என பெயர்பெற்று பின்னர் இது விவசாய மன்றம் என மாற்றம் பெற்றது.
- இக்கழகத்தின் மூலம் மாணவர்களுக்கு வேண்டிய அறிவு,செயல்முறைத் திறன், மனப்பாங்கு என்பன வளர்க்கப்பட்டு வருந்துள்ளது..
- இவ்வருடத்தின் மரநடுகைத் திட்டத்திற்கு வழங்குவதற்காக எலுமிச்சை, பலாக் கன்றுகள் என்பன உற்பத்தி செய்யும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
- மாணவிகளால் கத்தரி நாற்று மேடை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. "உணவுற்பத்தியில் மாணவர்கள் பங்கு என்ற விடயம் பற்றி ஆலோசகர் திரு. வே. கயிலைநாதன் என்பவரால் கருத்துக்கள் வழங்கப்பட்டன.
- பாடசாலை மட்டத்தில் விவசாய அறிவுப்போட்டி நடாத்தப்பட்டது.
- பாடசாலை தோட்ட செய்கை
- சேதன விவசாயம் தொடர்பாக மாணவர்கள் ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
- சேதன விவசாயம் மூலம் மரக்கறிகளை உற்பத்தி செய்து பாடசாலை மதிய உணவிற்கு வழங்குதல்.
- சேதன விவசாயம் மூலம் பழங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தல்
- மாணவர்களை விவசாயம் தொடர்பான கண்காட்சிகள் களப்பயணங்களுக்கு அழைத்துச் செல்லல்
- விவசாயம் தொடர்பான கருத்தரங்குகளை நடாத்துதல்
- பாடசாலை வலய மட்ட விவசாய போட்டிகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தல்
- பாடசாலையில் இயற்கைச் சூழலைப் பேணுதல்.
- கூட்டெரு தயாரித்தமை (2017)
- இயற்கைப் பீடை நாசினிகள் தயாரித்தமை (2017)
- இரசாயன கலப்பற்ற மரக்கறி விற்பனை (2017)
- மூலிகைத் தோட்டம் உருவாக்கியமை (2017)
- ஒட்டுமரச் செய்கை மேற்கொள்ளப்பட்டமை (2017)
- இலைவகை பயிர்ச்செய்கையும் விற்பனையும் (2017)
- பாடசாலை கவின் நிலையைப் பேணல் (2017)
- செயன்முறைப்பயிற்சிகளில் மாணவர்களை ஈடுபடவைப்பதுடன் மேலதிக விளக்கங்களுக்காக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாற் கருத்தரங்கும் நடாத்தப்பட்டன.