நிறுவனம்: யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம்

From நூலகம்
Name யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம்
Category பழைய மாணவி சங்கம்
Country இலங்கை
District கொழும்பு
Place ருத்ரா மாவத்தை
Address வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை
Telephone
Email -
Website -



1993ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி எமது கல்லூரி பொன் விழாத் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடவிருந்த வேளையில், கல்லூரியின் கொழும்புவாழ் பழைய மாணவிகள், கொழும்பிலும் இக்கல்லூரிக் கிளை ஒன்றினை அமைப்பதற்குத் தீர்மானித்தனர். ஆகஸ்ட் மாதம் 21ந் திகதி வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் அமைந்திருக்கும் இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் 35க்கு மேற்பட்ட பழைய மாணவிகள் ஒன்று திரண்டு சம்பிரதாய முறைப்படி சங்கக் கிளையை ஆரம்பித்து வைத்ததுடன் சங்க நிர்வாகிகளையும் தெரிவு செய்தனர். செல்வி சற்சொரூபவதி நாதன் பழைய மாணவிகள் சங்கத் தலைவியாகவும், திருமதி தயாநிதி செல்வநாயகம் சங்கச் செயலாளராகவும், திருமதி ராஜகுமாரி கதிர்காமநாதன் பொருளாளராகவும் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். இந்தச் சங்கம் உதயமாவதற்கு உறுதுணையாக முன்னின்று உழைத்தவர் ஆசிரியை திருமதி புஷ்பம் சுப்பிரமணியம் ஆவார். அவர் முழு மூச்சுடன் பல இடங்களுக்கும் சென்று பழைய மாணவிகளைச் சந்தித்து முதலில் ஒரு சில மாணவிகளை ஒன்று கூட வைத்து எம்மை ஊக்குவித்ததன் விளைவாகவே. எமது சங்கம் தற்பொழுது 80 அங்கத்தவல்களைக் கொண்டுள்ள, உயிர்த் துடிப்புள்ள சங்கமாக செயற்பட்டு வருகின்றது.

கொள்ளுப்பிட்டி வெஜிலண்ட்ஸ்ளேட்டலில், யாழ் இந்து மகளிர் கல்லூரிப் பொன்விழாவையொட்டிப் பழைய மாணவிகள் ஒரு மதிய பேசன விருந்தினை 1932ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 10ம் திகதி நடாத்தினர். அவ்விருந்துபசாரத்திற் கல்லுரியின் பழைய ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்லூரி நூல் நிலையத்துக்காக ஒவ்வொரு அங்கத்தவரும் இரண்டு பயனுள்ள நூல்களை அன்பளிப்பாகச் செய்த நூற் தொகுதியில் ஒரு தொகுதி நூல்கள் சங்கத் தலைவியிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரியின் பொன்விழா சம்பந்தமாகப் பழைய மாணவிகளின் கல்லூரித் தொடர்பு பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பிதழ் 1993ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 12ந் திகதி வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் இப்பிரசுரத்தினை வெளியிடுவதற்குப் பேருதவி புரிந்த வீரகேசரிப் பத்திரிகை ஆசிரியர்களையும், தாராளமாகப் பண உதவி வழங்கிய எமது பழைய மாணவிகளையும் பாராட்டுகின்றோம். இச்சிறப்பிதழ் பலருடைய பாராட்டுகளைப் பெற்றதோடல்லாமல் எமது சங்கத்தினையும் விளம்பரப் படுத்தியுள்ளது. எமது சங்கத்திற்கென ஒரு யாப்பு வரையறுக்கப்பட்டு அதன் பிரதி ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் வழங்கப்பட்டது. அத்தோடு சங்கத்தின் செயற்பாட்டிற்குத் தேவையான பதிவு ஏடுகள் அச்சடிக்கப்பட்டன. 100 தபாற் தலைகள், 500 தபால் அட்டைகள். 250 அங்கத்துவ விண்ணப்பப் படிவங்கள், பற்றுச் சீட்டுப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. 1994 ஜூன் மாதம் 13ந் திகதி. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியைத் தேசிய மட்டக் கல்லூரியாகத் தரம் உயர்த்துவது சம்பந்தமாக. அதற்குரிய ஆவணங்களையும் கடிதத்தையும் கல்வி இராஜாங்க அமைச்சரிடம் செயலனரும் பொருளாளரும் கையளித்தனர். 1994 ஜூன் 15ந் திகதி எமது கல்லூரி அதிபர் திருமதி சரஸ்வதி ஜெயராஜாவை, குறுகிய கால அவகாசத்தில் 24. டீல் பிளேஸ் A இல் உள்ள திருமதி அபிராமி கயிலாசபிள்ளை அவர்களின் இல்லத்தில் சில பழைய மாணவிகள் சந்தித்தனர். அச் சந்திப்பின்போது, அவர் எமது சங்கத்தின் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், கல்லூரிக்கு ஒரு கம்பியூட்டர், கல்லூரியின் கலையரங்கு மேடைக்குத் திரைச் சீலை, நூலகத்திற்கு நல்ல நூல்கள் போன்றவை அவசியமாகத் தேவைப்படுவதாகக் கூறினார். 1994 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ந் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகளில் மூவருக்கு அரசாங்க விருதுகள் கிடைத்தமையைப் பாராட்டுவதற்கு ஒரு வைபவம் நடைபெற்றது. "தொடர்பியல் வித்தகர்" என்ற விருது செல்வி சற்சொரூபவதி நாதனுக்கும், 'கலா ஜோதி" என்ற விருது திருமதி லீலா இரத்தினசிங்கத்துக்கும். திருமதி பத்மா சோமகாந்தனுக்கு இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைக்குத் தங்கப்பதக்கமும் கிடைக்கப் பெற்றதால் பார் அவர்களைப் புகழ்ந்து பாராட்டித் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். இச் சங்கம் துரிதமாக இயங்குகின்றது. அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகின்றது .இவ்விழாவிற்குக் கல்லூரி பற்றிய ஒரு வில்லுப் பாட்டுத் தயாராகிவிட்டது. ஒரு சமூக நாடகம், நடனங்களும் சேர்க்கப்படவுள்ளன. அடுத்து எமது சங்கத்தின் வெளியீடாக ஒரு சஞ்சிகை யாழ் நாதம்" என்ற பெயரினைப் பூண்டு பல மாணவிகளின் கட்டுரைகள் கதைகள் போன்றவற்றை உள்ளடக்கி, அச்சுக்குப்போகும் தறுவாயில் உள்ளது. இதற்குப் பொறுப்பாசு உள்ள திருமதி சிவகாமி அம்பலவாணர் துரிதமாகச் செயற்பட்டு வருகின்றார். மேலும் கல்லூரி நூலகத்திற்குச் சேகரிக்கப்பட்ட நூல்கள் யாவும் பொறுப்பான அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வரும்பொழுது அனுப்புவதற்குத் தயாராக இருக்கின்றன. இது தவிர யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குத் தேவையான ஒரு கம்பியூட்டர் பெற்றுக் கொடுப்பதற்கு வெளி நாடுகளிலுள்ள எமது கிளைச் சங்கங்களின் நிதியுதவியை நின்றமை. இச் சங்கத்தின் கூட்டங்களை நடாத்துவதற்கு ஒரு நிரந்தரமான இடவசதியில்லாமை. இதுவரை காலமும் அந்தக் குறையைத் தீர்க்கத் திருமதி அபிராமி கயிலாசபின்னையும் திருமதி இந்திராணி சோமசுந்தரமும் தாராள மனப்பான்மையோடும். மிகுந்த அக்கறையுடனும் தத்தமது இல்லங்களிற் பாரிய கூட்டங்களை நடாத்துவதற்கு எல்லா வசதிகளையும் செய்து தந்து உதவியுள்ளனர்.