நிறுவனம்: பரியோவான் முதலுதவிப் படை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
Name | பரியோவான் முதலுதவிப் படை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி |
Category | - |
Country | - |
District | - |
Place | - |
Address | - |
Telephone | {{{தொலைபேசி}}} |
{{{மின்னஞ்சல்}}} | |
Website | {{{வலைத்தளம்}}} |
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பரியோவான் முதலுதவிப் படையணியானது முதன் முதலாக 1990 ம் ஆண்டு யூலை மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்பகாலம் முன்னாள் பிரதி அதிபர் திருமதி இ. சண்முகத்தின் வழிநடத்தலில் சிறப்பாக இயங்கி வந்தது. இக் கழகம் 1996 முதல் திருமதி ரோ. பாலஸ்கந்தனின் வழிநடத்திலில் இயங்கிவந்தது.
பரியோவான் முதலுதவிப் படை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இதன் பொறுப்பாசிரியர் செல்வி செல்வஸ்தனி மாணிக்க வேல், செல்வி வாசுகி சிதம்பரநாதன் ஆகியோர் பணியாற்றினர்.
இப் படையணியானது பாடசாலை மட்டத் திலும், சமூக மட்டத்திலும் பல சேவை களைச் செய்துவருகின்றது.
இப்படையணி பின்வரும் செயற்திட்டங்களை, வேலைத் திட்டங்களாக்கி, தமது இலக்கை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளது. இச் செயற்றிட்டங்களில் சில உதாரணங்களை இங்கு குறிப்பிடலாம்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகளைப் பராமரித்தமை. பாடசாலையில் இடம்பெறும் விளையாட்டுப்போட்டி, பொது நிகழ்வுகளின் போது சேவையாற்றி வந்தமை. நல்லூர் கோவில் விழாக்கள், மே தின ஊர்வலம் என்பவற்றின் போது வீதி ஒழுங்கைக் கடைப்பிடித்தல், முதலுதவி அளித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டமை பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியின் போது அணி நடை வழங்கல். கொத்தணி மட்ட, கோட்ட மட்ட விளையாட்டுப்போட்டிகளின் போதும் தமது சேவையை ஆற்றுதல். மாகாண மட்டத்தில் நடைபெற்ற முதலுதவிச் செயல்முறைப்போட்டியில் கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவுகள் 1 ஆம் இடங்களைப் பெற்றுக் கொண்டமை. மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட அணிநடைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை. கல்லூரி கோவில் விழாக்களின் போது வீதி ஒழுங்கைக் கடைப்பிடித்தலுக்கு உதவுதல் முதலுதவிக்கு உதவுதல். ஆண்டுதோறும் பரியோவான் தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கிறது. முதலுதவி வகுப்புக்களை நடாத்தி இறுதியில் நடைபெறும் பரீட்சையில் சித்தியடையும் மாணவருக்கு சான்றிதழ் வழங்குகின்றது.