நிறுவனம்: தி/ புனித வளனார் பாடசாலை

From நூலகம்
Name தி/ புனித வளனார் பாடசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District திருகோணமலை
Place திருகோணமலை
Address தி/ புனித வளனார் பாடசாலை, திருகோணமலை
Telephone
Email
Website


திருகோணமலையின் மிகவும் பழமையான பாடசாலைகளில் ஒன்று இதுவாகும். எனினும் தற்பொழுது குறைந்தளவு மாணவர்களுடன், இன்னல்களுக்கு மத்தியில் கொண்டு நடாத்தப்படுகின்றது.

திருகோணமலை புனித வளனார் பாடசாலை 1867ம் வருடம் ஜேசு சபை பாதிரிமார்களினால் மாதாங்கோவிலடியில் ஸ்தாபிக்கப்பட்டு புனிதசூசையப்பர் தமிழ் பாடசாலை என்று திருகோணமலையில் பின்னர் அழைக்கப்பட்டது.

இந்தப் பாடாசலை ஆரம்பகாலங்களில் அடிப்படை வசதியில்லாது வறுமையில் வாடி பல காரணங்களினால் பிறசமூகத்துடன் இணைந்து வாழ முடியாத புறக்கணிக்கப்பட்ட சமூக மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவூட்டி கல்விமானாக்கியது என்பதைத் தாண்டி எங்கள் தமிழ் சமூகத்தில் தலை சிறந்தவர்களை இந்த சமூகத்திற்கு தந்திருக்கின்றது.

திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை, உதைபந்தாட்ட வீரர் புஸ்பாகரன் உட்பட பலர் இந்த பாடசாலையின் முன்னாள் மாணவர்களே.