நிறுவனம்: உடற்கல்வி மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

From நூலகம்
Name உடற்கல்வி மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
Category -
Country -
District -
Place -
Address -
Telephone {{{தொலைபேசி}}}
Email {{{மின்னஞ்சல்}}}
Website {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி உடற்கல்வி மன்றமானது கலைத்திட்டத்தில் மாணவர் ஆளுமை விருத்திக்கான இணைபாட விதான செயற்பாடுகளில் அங்கம் வகிக்கும் இம் மன்றமானது மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து ஆளுமையுடன் கூடிய நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்குடன் பலதரப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இம்மன்றமானது முதலில் விளையாட்டுத்துறை மன்றம் என்ற பெயரில் காணப்பட்டது. பின்னர் இம் மன்றம் உடற்கல்வி மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • விளையாட்டுத்துறை சார்ந்த நிகழ்வுகள் கல்லூரியில் சிறத முறையில் நடைபெற்று வந்தன.
  • பொறுப்பாசிரியரின் வழிநடத்தலில் மாணவர்களுக்கு விளையாட்ட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன
  • ஆண்டு தோறும் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் பாராட்டுக்களும் வழங்கப்படுகின்றன.
  • மேலதிகமாக கொத்தணி மட்ட நிலை, கோட்ட மட்ட நிலைகளில் உடற்பயிற்சி குழுப்போட்டிகள், மெய்வல்லுநர் போட்டிகள், வலைப்பந்தாட்டக் குழுப் போட்டிகள் என்பவற்றில் இக் கல்லூரி மாணவிகள் சிறந்த ஈட்டுக்களைப் பெற்று வந்துள்ளனர்.
  • 1992 ஆம் ஆண்டு கோட்ட மட்டத்தில் 15 வயது பிரிவில் செல்வி, ஜெ. சுயந்தாவும் , 19 வயதுப் பிரிவில் செல்வி க. மகானந்தக்குமாரியும் சிறந்த வீரங்கனைகளாகத் தெரிவு செய்யப்பட்டதையிட்டு கல்லூரி பெருமையடைந்துள்ளது
  • மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதன் மூலம் உடல், உள ஆரோக்கியம் பேணப்படுகிறது.சமூகத்திற்குப் பயனுள்ள மாணவர்களாகத் திகழ இத்துறை வழிவகுக்கின்றது.
  • இல்ல விளையாட்டுப் போட்டியை நடத்துதல்.
  • பெருவிளையாட்டு மெய்வல்லுநர் விளையாட்டிற்குப் பயிற்சி வழங்குதல்.
  • கோட்டம், வலயம், மாகாணம், தேசிய மட்டப் போட்டிகளுக்கு மாணவர்களைப் பயிற்றுவித்து அழைத்துச் செல்லல்.
  • 2016 ஆம் ஆண்டு கரம் 15 வயதின் கீழ்ப் பிரிவு தேசிய மட்டத்தில் 4ஆம் இடத்தௌ பெற்றமை சிறம்பம்சமாகும்.
  • 2024 ஆம் ஆண்டு எமது பாடசாலையில் எல்லே முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டு வலயப் போட்டியில் கலந்துகொண்டது.
  • 2024 ஆம் ஆண்டு எமது பாடசாலை நீச்சல் போட்டியில் தேசியம் மட்டத்தில் கலந்து கொண்டது.