நிறுவனம்: இன்ரறக்ட் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

From நூலகம்
Name இன்ரறக்ட் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
Category -
Country -
District -
Place -
Address -
Telephone {{{தொலைபேசி}}}
Email {{{மின்னஞ்சல்}}}
Website {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் இன்ரறக்ட் கழகமானது முதன் முதலாக 1990 ஆம் ஆண்டு திரு வி.கருணை ஆனந்தன் , திரு எஸ். உருத்திரலிங்கம் ஆகியோரின் தலைமையில் கல்லூரி ஆசிரியை திருமதி நி.நவரெட்ணராஜாவை பொறுப்பாசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

தன்னலமற்ற சேவை என்னும் தாரக மந்திரத்தை இலக்காக கொண்டு செயற்படும் இக்கழகமானது தம்மால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு தேவையான நிதியை கழக அங்கத்தவரகளால் செயற்படுத்தப்படும் நிதி சேகரிப்புத் திட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்கிறது.

இக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து படிப்படியாக மேற்கொண்டு வந்த செயற்பாடுகளுக்கான சில உதாரணங்களை குறிப்பிடலாம் :

மானிப்பாய் முகுந்தன் அகதிமுகாமிற்கு உடுபுடைவைகள் சேகரித்து வழங்கியதுடன், அங்குள்ள அகதிச் சிறுவர்களிற்கு வாய்நலம் பேணல் பற்றிய அடிப்படை உண்மைகளை விளக்கி மானிப்பாய் வைத்தியசாலையின் உதவியுடன் பற்சிகிச்சை அளித்தமை (1993)

அராலியிலுள்ள அகதி முகாமிற்கு உணவு, உடுபுடைவைகள் சேகரித்து விநியோகித்தமை. (1993)

பாதிக்கப்பட்ட கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உதவு முகமாக மாணவர்கள் மத்தியில் உண்டியல் வழங்கி நிதி சேகரிக்கப்பட்டது இந்நிதியானது பல்கலைக்கழக அக்கினிச் சிறகுகள் அமைப்பினூடாக அனுப்பி வைக்கப்பட்டமை. (1993)

ஆண்டுதோறும் கல்லூரியின் சின்னம் சூட்டும் விழாவை நடாத்தி "பரிதி" சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றமை.

றோட்டரிக் கழகத்தினால் நடாத்தப்படும் பொது அறிவுப் போட்டிகளில் மாணவர்களைப் பங்குபெறச் செய்வதன் மூலம் மாணவர்களின் அறிவை வளர்ச்சிக்கு உந்துதலாக அமைதல். (1993)

2000 ம் ஆண்டு தென்மராட்சிப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்தல் (1993)

2018ம் ஆண்டு பாடசாலையில் செய்யப்பட்டு வந்த செயற்பாடுகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, போதனா வைத்தியசாலை தேவாலயம் புத்தாண்டைக் கொண்டாடும் முகமாக வழங்கும் உதவிப் பொருட்களில் ஒரு சிறுதொகைப் பொருட்களை மாணவர் மத்தியில் சேகரித்து வழங்கியமை. (1993)

யாழ் பொலிஸ் நிலையப் பகுதியினரால் நடாத்தப்பட்ட வீதி ஒழுங்குக் கருத்தரங்கில் பங்குபற்றி கல்லூரி ஆரம்பிக்கும் மற்றும் முடிவுறும் நேரங்களில் வீதி ஒழுங்குகளில் ஈடுபட்டு மாணவரது பாதுகாப்பை பேணல். (1993)