நிறுவனம்:வராகி அம்மன் நிர்வாக சபை

From நூலகம்
Name வராகி அம்மன் நிர்வாக சபை - குஞ்சன்குளம்
Category அமைப்பு
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place குஞ்சன்குளம்
Address குஞ்சன்குளம், மாங்கேணி, மட்டக்களப்பு
Telephone 0776922036
Email -
Website -


வராகி அம்மன் நிர்வாக சபையானது கிழக்கு மாகாணத்தில் கரையோர வேடர்கள் செறிந்து வாழும் குஞ்சன்குளம், கிரிமிச்சை, மதுரங்குளம் ஆகிய கிராமங்களினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் வேடர் மற்றும் தமிழ்க்கலப்பு கொண்ட வராகி அம்மன் ஆலயத்தினது ஆகும். இவ்வாலயமானது கி.பி. 1966 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தலைவராக சி.பஞ்சாச்சரம் என்பவர் காணப்படுகின்றார். செயலாளராக க.மகேஸ்வரி என்பவர் காணப்படுகிறார். பொருளாளராக க.மனோகரன் என்பவர் காணப்படுகின்றார். மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக சி.கலாநாயகி, க.சிவனேசன், செ.ரசிகரன், கா. பேரானந்தம் மற்றும் க. அழகுராசா என்போர் காணப்படுகின்றனர். இவ்வமைப்பானது பழங்குடிகளின் வழிபாடுகளை மங்கச் செய்யாமலும், இடைச்செருகிக் கொண்ட பிற வழிபாட்டு முறைகளை தவிர்க்காமலும் கடமைகளைச் செய்து வருகின்றது.