நிறுவனம்:யாழ்/ வேலணை தெற்கு ஐயனார் வித்தியாசாலை

From நூலகம்
Name யாழ்/ வேலணை தெற்கு ஐயனார் வித்தியாசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address துறையூர், வேலணை தெற்கு, வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வேலணை தெற்கு ஐயனார் வித்தியசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் துறையூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. துறையூர் கிராம பிள்ளைகளின் கல்வி வளர்சிக்காக ஐயம்பிள்ளை கார்த்திகேசு, ஐயம்பிள்ளை நாகநாதன் போன்றோர்களால் இப் பாடசாலை அமைத்தலின் ஆரம்ப முயற்சிகள் 1947இல் எடுக்கப்பட்டன. பாடசாலைக்காண காணியை ஐயம்பிள்ளை கார்த்திகேசு கொடுத்து உதவினார். 60மாணவர்களையும் 03ஆசிரியர்களையும் கொண்டு தரம் 01தொடக்கம் 05வரை ஆரம்பிக்கப்படுகையில் நாகநாதன் அவர்களே அதிபராக கடமையாற்றினார்.

இந்துபோட் பாடசாலையாக ஆக்கப்பட்டதும் பல்வேறு வழிகளிலும் விருத்திபெறத்தொடங்கியது. 1960ஆம் ஆண்டு இப் பாடசாலை அரசாங்க பாடசாலையாக பொறுப்பேற்கப்பட்டதும் தரம் 01தொடகம் 08வரையான வகுப்புக்கள் நடாத்தப்பட்டது. 1991ஆம் ஆண்டு இராணுவ நடவடுக்கையால் இடம்பெயர்ந்தபோது யாழ்ப்பாணம் பாரதி வித்தியாலயத்தில் வேலணை ஆத்திசூடி வித்தியாலயத்துடன் இணைந்து இயங்கிவந்தது. 1997 ஆம் ஆண்டு மீளக்குடியமரும்போது இராணுவம் பாடசாலை வளாகத்தில் நிலைகொண்டிருந்தமையால் தற்காலிகமாக வேலணை சர்வோதய வித்தியாலயத்தில் இயங்கிவந்தது. பின்னர் 2000ஆம் ஆண்டில் சொந்த நிலத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டு இன்று பெருவளர்ச்சி கண்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 198-201