நிறுவனம்:யாழ்/ வேலணை துறையூர் ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

From நூலகம்
Name யாழ்/ வேலணை துறையூர் ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address 6ஆம் வட்டாரம், துறையூர், வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

துறையூர் ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது.

ஐயம்பிள்ளை கந்தையா என்பவர் கடற்பரப்பில் ஓர் வெள்ளிப் பேழையில் சங்கு வடிவத்தில் ஒரு பொருள் இரைந்து கொண்டு வருவதையும், அதை தானும் ஏனையோர்களும் சேர்ந்து எடுத்து வந்து பார்த்தபோது அது வேல் வடிவத்தில் தெய்வ ஒளியை வீசியதாகவும் கனவு கண்டுள்ளார். எனவே வேலினை மூலஸ்தானத்தில் வைத்து ஒரு கோவில் அமைப்போம் என மக்களுக்கு கூறியதாகவும் கோவில் வரலாறு கூறுகின்றது. இதற்கமைய இக் கோவிலுக்கான அடிக்கல் 1964ஆம் ஆண்டு பங்குனி மாதம் 12 மணியளவில் நாட்டப் பெற்றது. ஊர் மக்களினதும் ஏனைய பக்தர்களின் அயரா உழைப்பினால் இக் கோவிலின் கட்டுமானப் பணியை அராலியூர் ஸ்தபதியார் விஸ்வலிங்கம் பொறுப்பேற்று நடத்தி வந்தார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 137-141