நிறுவனம்:யாழ்/ வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம்
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address வேலணை மத்தி, வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. 1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01ஆம் திகதி நாவலர் பரம்பரையினரால் உருவாக்கி பரிபாலிக்கப்பட்டு வந்த வேலணை சைவப்பிரகாசம் வித்தியாலயத்தில் இப் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1997இல் இக்கல்லூரியைத் தனித்துவமாக இயங்க வைக்க வேண்டும் என பலர் முயற்சி செய்தனர். இக் கல்லூரியின் கல்விப் பணிப்பாளரான க.இரத்தினராசாவினதும், பழைய மாணவர்களினதும் முயற்சியால் வேலணை சரஸ்வதி வித்தியாலய கட்டடத்தில் இக் கல்லூரி இயங்க ஆரம்பித்தது.


Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 179-188