நிறுவனம்:யாழ்/ வறுத்தளைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் படசாலை

From நூலகம்
Name யாழ்/ வறுத்தளைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வறுத்தளைவிளான்
Address வறுத்தளைவிளான், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

விநாசித்தம்பி விதானையார் அவர்களின் முயற்சியினால் அமெரிக்க மிஷனரிமாரின் உதவியோடு 1816ஆம் ஆண்டு தம்பிப்பிள்ளை என்பவரை தலைமையாசிரியராகக் கொண்டு இப் பாடசாலை உதயமாகியது. 5ஆம் வகுப்புவரை இயங்கிவந்த இப் பாடசாலை 18.03.1900இல் கதிர்காமர் ஆறுப்பிள்ளை அவர்கள் தலமையாசிரியரான காலத்தில் உயர்தர பாடசாலையானது.

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சம ஆசன நடைமுறை காரணமாக 1931இல் இப் பாடசாலை தீக்கிரையானது. பின்னர் இலங்கை தென்னிந்திய திருச்சபையின் உதவியுடனும் கிராமவாசிகளின் உதவியுடனும் மீண்டும் இப் பாடசாலை கட்டிடம் காலத்திற்கேற்ப கல்விக்கூடமாக மிளிர்ந்தது.

திரு.ம.செல்லையா தலமையாசிரியராக இருந்த காலத்தில் க.பொ.த. வகுப்புக்கள் வரை காணப்பட்டது. பின்னர் 1945ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இலவச கல்வித் திட்டம் காரணமாக மாணவர்கள் கல்லூரிகளை நாடி சென்றமையால் மீண்டும் இப் பாடசாலை ஆரம்பப் பாடசாலையாக மாறியது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 34-35