நிறுவனம்:யாழ்/ வட்டுக்கோட்டை வீரபத்திர சிவன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ வட்டுக்கோட்டை வீரபத்திர சிவன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | வட்டுக்கோட்டை |
Address | வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
வட்டுக்கோட்டை வீரபத்திர சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தில் வட்டுக்கோட்டை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு நெடுங்காலமாக இருந்த வீரபத்திரர் கோயில் ஓலைக் குடிசையாக இருந்துள்ளது. பழைய காலச் சிலை பஞ்சலோகங்களால் ஆனது.
இங்கு ஓலைக் குடிசையில் இருந்த வீரபத்திர சுவாமிக்கு கற்சுவரால் கோயில் அமைக்க எண்ணிய போது சிவலிங்கப் பொருமானை வைக்க எண்ணி காசியிலிருந்து சிவலிங்கத்தை வருவித்தனர். அது சிவாகம விதிப்படி பிரதிட்டை செய்யப்பட்டு விசாலட்சி சமேத விசுவேசர் அங்கிருந்து அருள் பாலித்து வருகின்றனர். இங்கு நித்திய பூசை காலை மாலை இரு வேளைகளிலும் நடைபெறுகிறது.
Resources
- நூலக எண்: 5274 பக்கங்கள் 52-56