நிறுவனம்:யாழ்/ வட்டுக்கோட்டை வன்னியன்தோட்டம் சின்னக் கதிர்காமம்

From நூலகம்
Name யாழ்/ வட்டுக்கோட்டை வன்னியன்தோட்டம் சின்னக் கதிர்காமம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வட்டுக்கோட்டை
Address வன்னியன்தோட்டம், வட்டுக்கோட்டை மேற்கு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வன்னியன்தோட்டம் சின்னக் கதிர்காமம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டை மேற்கில் வன்னியன் தோட்டத்தில் அமைந்துள்ளது. வட்டூர் சைவப்பெரியார் சின்னட்டியாரின் மகனான முருகுப்பிள்ளையின் மகனான வெற்றிவேல் 1915ம் ஆண்டு கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்றபோது கோயில் அர்ச்சகராகிய “கப்புறாளை” தங்கவேல் ஒன்றைக் கொடுத்தார். கதிர்காம யாத்திரை நிறைவடைந்து வட்டுக்கோட்டைக்கு வந்த வெற்றிவேல் உடன் பிறந்தாள் நன்னிப்பிள்ளையின் இல்லத்தில் சிறுகுடில் அமைத்து தங்கவேலைத் தாபித்து வழிபட்டு வந்தார். 1921ஆம் ஆண்டில் வெற்றிவேலரின் தந்தையின் காணியான வன்னியன் தோட்டத்திலே தங்கவேலை எழுந்தருளிவித்துப் பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டது. 1931 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 16அந் திகதி சின்னட்டியார் முருகுப்பிள்ளை தனது ஆதனத்தை பங்கீடு செய்து வெற்றிவேலருக்குரிய பகுதியை உறுதி சாசனம் வழங்கியபோது அவரது காணியில் சிறிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு தங்கவேல் பிரதிட்டை செய்யப்பட்டது. அன்று திருக்கோயிலுக்கு வன்னியன் தோட்டம் சின்னக்கதிர்காமம் என நாமஞ் சூட்டப்பட்டது.