நிறுவனம்:யாழ்/ யாழ் இந்து மகளிர் கல்லூரி

From நூலகம்
Name யாழ்/ யாழ் இந்து மகளிர் கல்லூரி
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place
Address அரசடி வீதி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website www.jhlc.sch.lk

Resources

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி (Jaffna Hindu Ladies' College) என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற பாடசாலை ஆகும் .இந்தப் பாடசாலை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், சிறப்பான இந்து பெண்களுக்கான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாணம் 1888 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இந்து மதம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை புதுப்பிக்கவும் மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் உருவாக்கப்பட்டது. 13 இந்துக் கல்லூரிகளை நிர்வகித்த சபாய், மேலாண்மை வாரியம் மற்றும் இணைந்த பள்ளிகளை அமைத்தது. இந்த மேலாண்மை வாரியம் 1902 இல் அரசாங்கத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி கஸ்தூரியார் வீதியில் இந்துக் கல்லூரியின் விளையாட்டுத்திடலுக்குக் கிழக்குப் பக்கமாக அமைந்த திருவாளர் சிவகுருநாதர் பொன்னுச்சாமி அவர்களின் பொன்னாலயம் எனும் தனியார் வீடொன்றில் இந்து மகளிர் கல்லூரி எனும் பாடசாலை 1943.09.10 தொடக்கம் இயங்கத் தொடங்கியது.

திரு சிவகுருநாதர் பொன்னுசாமி என்பார், தனது வீடான பொன்னாலயத்திலே பாடசாலையை இயங்க அனுமதித்தார். பாடசாலையில் மாணவர் தொகை அதிகரிக்க, 1944ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி யாழ் இந்துக் கல்லூரியின் மைதானத்தின் ஒரு பகுதிக்கு பாடசாலை மாற்றப்பட்டது. நல்லை நகர் ஆறுமுக நாவலர் பெருமான் உருவாக்கி விட்டுப்போன தமிழ்ப் பற்றும் சைவசமயப் பற்றும் 1888ம் ஆண்டினில் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும் தமிழர் தம் கலாச்சாரத்திற்கும் புத்துயிர் கொடுக்கும் சைவ பரிபாலன சபையாய் உருண்டது இச்சபையானது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் இணைந்த கல்லூரிகள் அதிகார சபை ஒன்றை உருவாக்கி அதன் மூலம்பாடசாலைகளை நிருவகித்து வந்தது. இந்தச் சபையானது அரசினரால் 1902 இல் உத்தியோக பூர்வமாய் அங்கீகரிக்கப்பட்டது. 1935இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்த திரு குமாரசுவாமி அவர்கள், அதுவரை காலமும் ஆண்கள் பாடசாலையாயிருந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெண்பிள்ளைகளை அனுமதிக்க ஆரம்பித்தார். அவரின் இந்த புரட்சிகரமான செயற்பாடு வண்ணார்பண்ணையிலிருந்த பலரதும் கவனத்தை ஈர்த்தது. விரைவிலேயே பெண்களுக்கென்று தனியான ஒரு பாடசாலை தேவை என்ற நிலையினையும் ஏற்படுத்தியது இன்று, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, பெண்களுக்கு உயர்தர கல்வி வழங்கும் முன்னணி கல்வி நிறுவனமாக திகழ்கின்றது. நவீன காலகட்டத்தில் கல்லூரியின் பாடத்திட்டங்கள், விளையாட்டுத் திறன்கள், மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உலகளாவிய ரீதியில் போட்டி அளிக்கின்றன.தற்போதைய தலைமுறை மாணவிகள் நவீன உலகிற்கு தேவையான அனைத்து திறன்களையும் கற்றுக்கொள்கின்றனர். இதனால் இங்கு கல்வி கற்ற பெண்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் வல்லுநர்களாக திகழ்கின்றனர். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, அதன் 80 ஆண்டுகளுக்குள் கல்வி, கலாச்சாரம், மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் வழியாக யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 19ம் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர்கள் இடையே தோன்றிய மொழி,சமய, பண்பாட்டு விழிப்புணர்வுக்கு நல்லூர் திருப்பெருந்திரு ஆறுமுகநாவலரும் அவரின் பின் சேர் பொன்னம்பலம் இராமநாதனும், சேர் பொன்னம்பலம் அருணாசலமும் பெரிதும் காரணர் ஆயினர் என்பது வரலாறு. "நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேற் சொல்லு தமிழெங்கே சுருதி எங்கே - எல்லவரும் ஏத்துபுராணாகமங்க ளெங்கேப்ர சங்க மெங்கே ஆத்தனறி வெங்கே யறை" சி.வை.தாமோதரம்பிள்ளை மிஷனரிமார்களின் ஆங்கில மொழி மூலக் கல்வியையும் அதனால் அரச உத்தியோகங்களைப் பெறும் வாய்ப்பையும் பயன்படுத்தி இந்துக்களை மதம் மாற்றுவதைத் தடுக்கவும், சைவசமய பண்பாட்டு சூழலில் அக்கல்வியைப் போதிக்கவும் கூடியதாக பாடசாலைகளை நிறுவ வேண்டும் என்ற இப்பெரியோரின் சிந்தனைகளாலே தூண்டப்பட்டு சைவபரிபாலனசபை. சைவ வித்தியா விருத்திச் சங்கம். இந்துக்கல்லூரிச் சபை என்பன கல்வித்துறையிலே முனைப்புடன் ஈடுபடலாயின. இதன் பயனாக சைவப் பாடசாலைகளும், இந்துக் கல்லூரிகளும் நிறுவப்பட்டன. பிள்ளைகள் தமது சொந்தப் பண்பாட்டு சூழலிலே கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றனர். ஆனால் அக்காலகட்டங்களில் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பல புதிய சிந்தனைகளும் கருத்துக்களும் கூறப்பட்ட போதும் அவை செயல் வடிவம் பெறுவதற்கு வாய்ப்பான சூழல் மிக அரிதாகவே இருந்தது. ஏனெனில் இந்துக்குடும்பங்கள் பின்பற்றி வந்த ஆசார அனுட்டானங்கள். பண்பாடுகள் பெண்களுக்கு கூடிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தின. பெண்கள் கல்வி கற்க சைவத் தமிழ் கலவன் பாடசாலைகள் இருந்த பொழுதும் அவர்கள் பருவம் எய்தியதும் பாடசாலையினின்றும் இடை நிறுத்தப்பட்டனர். மிஷனரிமார்களினால் நிறுவப்பட்ட கிறிஸ்தவ தனிப் பெண்கள் பாடசாலைகள் இருந்த பொழுதும் தமது பெண் பிள்ளைகளை கிறிஸ்தவ மத கலாசார சூழலில் கல்வி கற்க அனுப்புவதற்கு சைவ சமய பண்பாடுகளிலே அதீத நம்பிக்கைகளைக் கொண்டிருந்த இந்துக் குடும்பத்தவர்கள் தயங்கினர். இதன் காரணமாக தம் பெண்பிள்ளைகளின் கல்வியை ஆரம்பக் கல்வியுடன் இடை நிறுத்தினர். இந்நிலையில் கலாசாரம்,மொழி, சமயம் ஆகியவற்றை மக்களிடையே விருத்தி செய்வதன் மூலம் எங்கள் இனத்தின் கலாசாரம், பண்பாட்டைப் பேணவும், முன்னெடுத்துச் செல்லவும் முடியுமென்று அறிந்திருந்த அக்கால கற்றறிந்த பெரியோர் பெண்கள் கல்வியை விஸ்தீரணப்படுத்துதல் இக்குறிக்கோளை அடைவதற்கு உரிய முக்கிய மாற்றங்களில் ஒன்று என்பதனை உணர்ந்தனர். ஏற்கனவே இதே சிந்தனையினால் தூண்டப்பட்டு ஆண்கள் பாடசாலைகளையும், கலவன் பாடசாலைகளையும் நிறுவிய பெருமக்கள் தனிப் பெண்கள் பாடசாலைகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தனர். இவர்களில் முதன்மையானவர் சேர் பொன் இராமநாதன் அவர்கள் ஆவார். மற்றும் இந்துக்கல்லூரிச் சபையினர் (Hindu College Board), திருவாளர்.எஸ்.இராஜரட்ணம் தலைமையிலான இந்து போர்டை (Hindu Board)சேர்ந்தவர்கள். இவர்களை விட இச்சிந்தனையில் உந்தப்பட்ட எம்.ஏ.முத்துக்குமாரு. டாக்டர் பி.எஸ் சுப்பிரமணியம். திரு.காராளசிங்கம், திரு.வேலாயுதம் போன்ற தனிநபர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இச்சிந்தனையின் அடிப்படையில் கௌரவ இராமநாதன் அவர்கள் 1903ஆம் ஆண்டு மருதனார் மடத்தில் இராமநாதன் மகளிர் கல்லூரியை அமைத்ததன் மூலம் அக்கால மிஷனரிமாரின் கிறிஸ்தவப் பாடசாலைகளில் எமது பெண்கள் கல்வி கற்று மேலைநாட்டு கலாசார மோகத்தில் மூழ்கிப் போகாது தடுப்பதற்கு முயன்றார். இதுமட்டுமல்லாது கல்வி கற்காமல் இருந்த பெரும்பகுதி பெண்ணினம் சைவசமய தமிழ் பண்பாட்டு சூழலில் கல்வி கற்கவும் வாய்ப்பளித்தார். இக்காலகட்டங்களில் 1888 இல் ஸ்தாபிக்கப்பட்ட சைவபரிபாலன சபையினால் நியமிக்கப்பட்ட நிர்வாக சபையினர் இன்றைய இந்துக் கல்லூரியை நிர்வகித்து வந்தனர். இந்த நிர்வாக சபை 1902ஆம் ஆண்டு இலங்கை அரசினால் உத்தியோக பூர்வமாக யாழ் இந்துக்கல்லூரியின் அதிகாரசபை என அங்கீகாரம் பெற்றது. இச்சபையினர் 13 இந்துக் கல்லூரிகளையும், பாடசாலைகளையும் நிறுவி நிர்வகித்து வந்தனர். இவ்வாறு இந்துக் கல்லூரி சைவசமயச் சூழலில் ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஒரு பாடசாலையாக எமது பிரதேசத்தில் உருவாகி இருந்தபோதும் ஆண்கள் மட்டுமே பயிலக்கூடிய ஒரு பாடசாலையாகவே செயற்பட்டு வந்தது. இக்கால கட்டங்களில் யாழ் நகரில் இந்துப் பெண்களுக்கென ஒரு சாதாரணப் பாடசாலை தன்னும் இல்லாதது ஒரு பெரும் குறையாகவே காணப்பட்டது. இந்நிலையில் இந்துக்கல்லூரி அதிகார சபையிலிருந்த பெரியோரும், அவ்வேளையில் இந்துக்கல்லூரி அதிபராக இருந்த திருவாளர் A.குமாரசுவாமி அவர்களும் யாழ் இந்துக் கல்லூரியில் சிறுமிகளும் கற்று வல்லவர்களாக உயர வாய்ப்பளிப்பதென தீர்மானித்தனர். இத்தீர்மானம் 1935ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு யாழ் இந்துக் கல்லூரியில் பெண் சிறார்களும் இணைந்து கல்வி கற்கத் தொடங்கினர்.ஆனால் காலகதியில் அதிபர்.A.குமாரசுவாமி அவர்களும் அன்று வண்ணார் பண்ணையில் வாழ்ந்த பிரபல்யம் மிக்க அறிஞர் பெருமக்களும் பெண்களுக்குத் தனியாக ஒரு கல்லூரி நிறுவவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். அதற்கான முயற்சிகளிலும் இறங்கினர். தமது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முதற்படியாக கஸ்தூரியார் வீதியில் இந்துக் கல்லூரியின் விளையாட்டுத்திடலுக்குக் கிழக்குப் பக்கமாக அமைந்த திருவாளர் எஸ். பொன்னுச்சாமி அவர்களின் "பொன்னாலயம்" எனும் தனியார் வீடொன்றில் இந்து மகளிர் கல்லூரி எனும் பெயரில் மகளிருக்கான பாடசாலையை ஆரம்பித்தனர்.' இப்பாடசாலை 10.09.1943 தொடக்கம் இயங்கத் தொடங்கியது. 8ஆசிரியர்களையும் 110 மாணவிகளையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு முதலதிபராக திரு.A. குமாரசுவாமி அவர்களே கடமையாற்றினார். நாடு போற்றிய கல்விமானாகிய இவர், ஒரு தகுதி வாய்ந்த பெண் அதிபர் நம் கல்லூரிக்கென தனியாகக் கிடைக்கும் வரை எம் கல்லூரியின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பினை இதய பூர்வமாக நல்கினார். 1944ஆம் ஆண்டில் இருந்து எம் கல்லூரிக்கென நிர்வாக சபையின் மேற்பார்வையில் சுயேட்சை அதிகாரம் கொண்ட பெண் அதிபர்கள் நியமிக்கப்பட்டனர். இவ் அதிபர்கள் வரிசையில் செல்வி காயத்திரி பொன்னுத்துரை(திருமதி. காயத்திரி கணேசன்) கல்லூரியின் முதல் அதிபராக நியமனம் பெற்றார். இக்காலத்தில் நான்காம் வகுப்பு தொடக்கம் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புக்களே நடைபெற்றன. சிறியளவில் ஒரு விடுதியும் ஆரம்பிக்கப்பட்டது. தனிப் பெண்கள் பாடசாலையாக இயங்கியமையால் நாளடைவில் மாணவர்கள் தொகையும் அதிகரிக்கத் தொடங்கியது. இடநெருக்கடி காரணமாக இப்பாடசாலை இந்துக்கல்லூரி மைதானத்துக்கு தற்காலிகக் கொட்டில்கள் அமைக்கப்பட்டு 27.02.1944 இல் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இவ் ஆண்டிலேயே எதிர்பாராத வகையில் தம் சொந்த அலுவல்களின் நிமித்தம் செல்வி காயத்திரி கணேசன் அவர்கள் தனது சேவையினின்றும் விலக நேரிட்டது. இதன் பொழுது எமது நாட்டிலேயே தகுதி வாய்ந்த ஒரு பெண் அதிபரைத் தேடி அலைந்த நிர்வாக சபையினர் இந்தியாவில் இருந்து பொருத்தமானவரைத் தருவித்து ஒப்பந்த அடிப்படையில் அதிபராக நியமிக்க முடிவு செய்தனர். இதன் காரணமாக இந்தியப் பெண்மணியான செல்வி முத்து அச்சையா அவர்கள் 1944ஆம் ஆண்டு இறுதியில் அதிபராக கல்லூரியைப் பொறுப்பேற்றார். வகுப்புக்கள் சிரேஷ்ட தராதரப்பத்திரம் வரை அதிகரித்தன. கல்லூரி மீண்டும் இட நெருக்கடியால் அவதிப்பட நேர்ந்தது.இங்ஙனம் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடங்களில் பாடசாலை இயங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே இந்துக்கல்லூரி அதிகார சபையினரும், திருவாளர். A. குமாரசாமி அவர்களும் நிரந்தரமான ஒரு காணியில் இந்து மகளிர் கல்லூரியை நிரந்தரமாக அமைக்க தீவிரமாகச் செயற்பட்டனர். இவர்களுடைய முயற்சி கைகூடுவதற்கும் சைவத்தமிழ் பெண்களின் கல்விக்கும் நல்வாழ்விற்கும் ஒருவரப்பிரசாதமெனக் கைங்கரியம் ஒன்றை சைவப்பெரியார் சிவகுருநாதர் விசாலாட்சி குடும்பத்தினர் செய்தனர்.