நிறுவனம்:யாழ்/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம்
Name | யாழ்/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம் |
Category | பாடசாலைகள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | மாதகல் |
Address | மாதகல், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயமானது யாழ்ப்பாணத்தின் மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. மாதகல் மக்கள் மனதில் சைவப் பாடசாலை ஒன்று நிறுவப்படவேண்டும் என்ற எண்ணம் எழவே 1918ஆம் ஆண்டு தை மாதம், கல் வீட்டுப் பொன்னு என்பவரின் இல்லத்தில் திண்ணைப்பள்ளி ஒன்று ஆரம்பமானது. நாளடைவில் இம் முயற்சி தீவிரமடைந்து பிள்ளையார் கோவிலுக்கு மேற்குப் புறமாக உள்ள காணி ஒன்றில் பாடசாலைக் கட்டிடம் அமைக்கப்பட்டு விக்னேஸ்வரா வித்தியாலயம் என்ற பெயருடன் சைவ வித்தியா விருத்திச் சங்கப் பாடசாலையாக கரவெட்டியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆசிரியரின் தலமையின் கீழ் விசுவநாதர், சுப்பர் ஆசிரியர்களின் உதவியுடன் இயங்க ஆரம்பித்தது.
1924ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இப் பாடசாலையின் கூரை 1974ஆம் ஆண்டு சீரற்று வுழும் நிலை காணப்பட அதிபர் வீரவாகு அவர்கள் தனது அயராத உழைப்பினால் அரசாங்கத்தின் உதவி பெற்று இதனை திருத்தி அமைத்தார். மேலும் அதன் பின் அதிபர் மு.பரராசசிங்கம் அவர்களும் இப் பாடசாலையை பல வழிகளிலும் மீளமைத்தார்.
Resources
- நூலக எண்: 13940 பக்கங்கள் 95-96