நிறுவனம்:யாழ்/ பொன்னாலை வரதராஜபெருமாள் கோவில்

From நூலகம்
Name யாழ்/ பொன்னாலை வரதராஜபெருமாள் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place பொன்னாலை
Address பொன்னாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்குத் திசையாக சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்த கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் அமைந்துள்ள பொன்னாலைக் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் முதன்மை பெற்று விளங்கும் வரதராஜ பெருமாள் ஆலயத்தை மூதாதையினர் "பொன் ஆலயம்" என்று அழைத்து வந்ததாகவும், அப் பெயர் மருவி தற்பொழுது பொன்னாலை என அழைக்கப் பெறுவதாகவும் செவிவழி வந்த கதைகள் கூறுகின்றன.

இந்திரனின் சாபத்தைப் போக்க கிருஷ்ணர் (ஆமையாக) கூர்ம அவதாரம் எடுத்த கூர்மாவதார ஸ்தலமாக நம்பப்படும் இவ் ஆலயம் பதினாறாம் நூற்றாண்டு காலத்தில் ஏழு சுற்றுப்பிரகாரங்களுடன் காணப்பட்டது என்றும் குறிப்புகள் உள்ளன. இப்பெரிய கோயிலை போர்த்துக்கேயர்கள் துடைத்தழித்து விட்டனர். இன்றுள்ள கோயில் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகும். ஆனாலும் பழைய அடையாளங்கள் இன்றும் உள்ளன.

ஆலய கருவறையில் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். தனியான மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசிக்கலாம். இவ் ஆலையத்தில் அமையப்பெற்ற 108 அடி உயரமான இராஜகோபுரமே யாழ்ப்பாணத்தில் அதி உயர் கோபுரமாக விளங்குகின்றது. வருடம் தோறும் ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 19 நாட்களும், மார்கழியில் பரமபதவாயில் ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களும் இரண்டு மஹோற்சவங்கள் இடம்பெறுகின்றது.

வெளி இணைப்பு