நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி கோவில்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 12ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
புங்குடுதீவு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி கோவிலானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் தல்லையபற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இவ் ஆலயம் யாழ்ப்பாணம் கச்சேரியில் உள்ள பதிவேடுகளின் படி 1892 ஆம் ஆண்டு தீவக மணியகாரர் மகள் இராமாசிப்பிள்ளை அவர்களால் சுண்ணாம்புக் கட்டடத்தில், வேலை மூலவராகக் கொண்டு மடாலயமாய்க் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ் ஆலயம் கச்சேரியில் 1892 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு 1805 என்ற பதிவு எண்ணையும் கொண்டுள்ளது. ஆகவே இது முதலாவது குடமுழுக்கின் போது பதியப்பட்டாலும் இவ் ஆலயம் 1892 இற்கு முன்பே தோன்றியதாகக் கருதப்பட வேண்டியதாகவுள்ளது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 107-108