நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு கோயில் வயல் முத்துமாரி அம்பாள் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு கோயில் வயல் முத்துமாரி அம்பாள் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
புங்குடுதீவு கோயில் வயல் முத்துமாரி அம்பாள் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் பெருங்காட்டில் அமைந்துள்ளது. இப் பெருங்காட்டில் மான்கள் நிறைந்து வாழ்ந்த மானெழுவம் பகுதியில் அம்பாள் அழகிய நெல் வயல்களின் மத்தியில் வீற்றிருப்பதால் அந்த இடம் கோயில் வயல் எனப் பெயர் பெற்றது.
பக்தர் ஒருவரின் வேண்டுதலின் பேரில் ஆலயத்தின் மேற்குப் புறமாக காணப்பட்ட கிணற்றில் இருந்து அம்பாளின் மூல விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டு தற்போது ஆலயம் அமைந்திருக்கும் வேப்பமரத்தடியில் வைத்து வழிபாடு செய்ததாக இவ் ஆலயத்தின் வரலாறு கூறுகின்றது. புங்குடுதீவு இரண்டாம் வட்டாரம் அமரர் இராமநாதன் அம்பலவாணர் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களின் வயற்காணிகளிலேயே அம்பாளுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 106-107