நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address 10ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website


புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம் என வழங்கும் ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

புங்குடுதீவிலே வாழ்ந்த நிலச்சுவாந்தர்களில் ஒருவராகிய கதிரவேலு ஆறுமுகம் உடையார் என்பவர் புங்குடுதீவின் தென்கிழக்கு கடற்கரையிலே கோரியா என்னும் இடத்தில் ஒரு பேழையினை கண்டெடுத்து, அப்பேழையினை எடுத்து வந்து தற்போது இவ்வாலயம் அமைந்துள்ள இடத்திலே இருந்த பழமையான பூவரசம் மரத்தின் கீழே வைத்து திறந்து பார்த்தபோது அங்கே ஒளிமயமாகிய ஒரு அம்பாள் சிலை காணப்பட்டதாகவும் உடனே ஆறுமுகம் உடையார் ஊர்மக்களின் உதவியோடு அங்கே சிறியதொரு கோயிலை அமைத்து வணங்கி வந்ததாகவும் ஆலயத்தின் வரலாறு கூறப்படுகின்றது. பின்னர் காலத்துக்கு காலம் இவ்வாலயம் புனரமைக்கப்பெற்று வந்து நாளடைவிலே சுண்ணக்கல்லினாலே நிரந்தரக்கட்டடம் அமைக்கப்பெற்றது. 1880ம் ஆண்டிலிருந்து நித்திய நைமித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெறத்தொடங்கியது.


வெளி இணைப்புக்கள்