நிறுவனம்:யாழ்/ பலாலி சித்திவிநாயகர் வித்தியாலயம்
Name | யாழ்/ பலாலி சித்தி விநாயகர் வித்தியாலயம் |
Category | பாடசாலைகள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | பலாலி |
Address | பலாலி, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
பலாலி சித்தி விநாயகர் வித்தியாலயமானது யாழ்ப்பாணத்தின் பலாலி பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1905ஆம் ஆண்டு பலாலியில் வாழ்ந்த சைவ சான்றோர்களால் தகனரோடைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் திரு பொன்னம்பலம் கயிலாயப்பிள்ளை அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் 30 மாணவர்களுடன் சித்திவிநாயகர் வித்தியாலயம் என்ற பெயரில் ஒரு பாடசாலையை ஆரம்பித்தனர்.
பாடசாலையிற் சமாசனம் கொடுக்கப்பட்ட காரணத்தினால் சில மாதங்களுள் பாடசாலைக்குத் தீ வைக்கப்பட்டது. 1925ஆம் ஆண்டு மயிலிட்டியைச் சேர்ந்த அமரர் இராமநாதன் சின்னத்தம்பி அவர்களைத் தலமை ஆசிரியராகக் கொண்டு 5 ஆசிரியர்களுடனும் 100 மாணவர்களுடனும் மீண்டும் அதே இடத்தில் பாடசாலை இயங்கத் தொடங்கியது. பின்னர் 1930ஆம் ஆண்டு மாசி மாதமும் சமாசன பிரச்சினை காரணமாக பாடசாலை கட்டிடம் தீ வைக்கப்பட்டது.
அதே இடத்தில் மீண்டும் பாடசாலை நடத்த இயலாது என்பதை அறிந்த பொது மக்கள் மயிலிட்டி டச்சு வீதியில் பொன்னம்பலம் கைலாயப்பிள்ளை அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வல்லவிரானை என்னும் காணியில் 1931ஆம் ஆண்டு தை மாதம் ஓலைக் கொட்டில் அமைத்து பாடசாலையை நடத்தினார்கள். ஆனபோதும் அதே ஆண்டு மார்கழி மாதம் மீண்டும் பாடசாலைக்கு தீ இடப்பட்டது.
1935ஆம் ஆண்டு ஊரில் நிதி சேகரித்து படசாலை கட்டிடம் கல்லால் கட்டப்பட்டது. அப்பொழுது 1ஆம் வகுப்பு தொடக்கம் 8ஆம் வக்குப்பு வரை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது உலக மகா யுத்தம் காரணமாக அரசாங்க விமானத்தளம் பாடசாலையை சுவீகரித்துக் கொண்டது. இதனால் 1943ஆம் ஆண்டில் கம்மி தோட்டத்தில் தற்காலிக பாடசாலை அமைத்து நடத்துவதற்கு சின்னத்தம்பி கதிரியார் என்பவர் காணி கொடுத்து உதவினார். பின்னர் யுத்தம் முடிவடைந்த பிறகு அதே இடத்தில் இப் பாடசாலை அரசாங்க பாடசாலையாக ஆரம்பமானது. 1972 இல் சின்னப்பு சுப்பிரமணியம் அவர்கள் அதிபராக பணியாற்றுகையில் 9ஆம் 10ஆம் வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன. 1984இல் பாடசாலை அமைந்துள்ள இடம் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டமையால் பாடசாலையை தொடர்ந்ஹும் அவ் இடத்திலே நடாத்தமுடியாத நிலை ஏற்படவே தற்காலிகமாக கிரம முன்னேற்றச்சங்க கட்டிடம், பல நோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடம் ஆகியவற்றில் இயங்கியது.
Resources
- நூலக எண்: 13940 பக்கங்கள் 82-83