நிறுவனம்:யாழ்/ பண்டத்தரிப்பு சாந்தை சித்தி விநாயகர் கோயில்

From நூலகம்
Name யாழ்/ பண்டத்தரிப்பு சாந்தை சித்தி விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place சாந்தை
Address சாந்தை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

சாந்தை சித்தி விநாயகர் கோயில் (சாந்தை ஈஸ்வர விநாயகர் கோயில்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க ஜம்புகோளத்துறையை அண்டிய பண்டத்தரிப்புப் பிரதேசத்தில் சாந்தைக் கிராமத்தில் அமைந்துள்ளது. இலங்கையின் சரித்திரத்தை ஆராயும்போது இது மிகவும் பழமை வாய்ந்ததாகக் கருத இடமுண்டு. இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய செட்டிமாரின் வருகையோடு ஆரம்பிக்கப்பட்ட கோயிலே சாந்தை சித்தி விநாயகர் கோயில். செட்டிமார் தென்னிந்தியாவில் வழிபட்ட குலதெய்வமான சந்தோஷி விநாயகரை இங்கு கொண்டு வந்து வணங்கினர். பிற்காலத்தில் சந்தோஷி என்ற சொல் மருவிச் சாந்தை எனப்பட்டது. இலுப்பை மரத்தடியில் ஓலைக்கொட்டிலில் சந்ததி சந்ததியாக இங்கிருந்த செட்டிமார்களினால் பூசிக்கப்பட்டு வந்த இவ்வாலயம் 1930ல் கர்ப்பக்கிரகத்துடன் கூடிய ஒரு ஆலயமமைத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்பு கிராம மக்களின் பொறுப்பில் வந்த இவ்வாலயம் புனருத்தானம் செய்யப்பட்டு 2001இல் கும்பாபிசேகம் செய்யப்பட்டு இன்றுவரை கிராம மக்கள் நிர்வாகத்திலேயே பரிபாலிக்கப்படுகிறது.