நிறுவனம்:யாழ்/ சாவகச்சேரி நுணாவில் சந்திரசேகர வாரிவனநாதர் சிவன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ சாவகச்சேரி நுணாவில் சந்திரசேகர வாரிவனநாதர் சிவன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | சாவகச்சேரி |
Address | நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
சந்திரசேகர வாரிவனநாதர் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிவலிங்கம் காசியில் கிடைத்த பாணலிங்க விசேடமுடையது. வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயமும், சந்திரசேகர வாரிவனநாதர் சிவன் ஆலயமும் ஒரே தினத்திலே அத்திவாரம் இட்டதாக அறியப்படுகிறது. வாரி என்ற புற்களைக் கூடுதலாகக் கொண்ட ஒரு பாதையில் சிவலிங்கத்தைக் கண்டெடுத்தனர். அதில் எழுந்த கோயிலே வாரிவனநாதர் கோயில் ஆனது. இந்தக் கோயிலை வாரிவனநாத கோயில் அல்லது வாரியப்பர் கோயில் என்று கூறுவர்.