நிறுவனம்:யாழ்/ கோண்டாவில் சிவமகா காளி அம்பாள் கோயில்

From நூலகம்
Name யாழ்/ கோண்டாவில் சிவமகா காளி அம்பாள் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place கோண்டாவில்
Address பொற்பதி வீதி, கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website


கோண்டாவில் சிவமகா காளி அம்பாள் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறையிலே காளி அம்பாள் வீற்றிருக்கிறாள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இளையதம்பி தெய்வானைப்பிள்ளை எனும் அம்மையாரில் காளி உக்கிரமாக உருக்கொண்டு ஆடி வந்ததாகவும் இதையிட்டு இளையதம்பி அவர்கள் அந்த அம்மையாரை வருத்தாது ஒரு இடத்தில் அமர்ந்தால் நாங்கள் பொங்கல், பூசை செய்து வழிபாடாற்றுவதாக கூறியதற்கிணங்க 1850 ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் அவருடைய காணியில் வடக்குப் பக்கமாக ஓரிடத்தில் அமர்ந்ததாகவும் அதையிட்டு அவ்விடத்தில் ஒரு சிறு குடில் அமைத்து பொங்கல், பூசை வழிபாடாற்றி வந்துள்ளனர். 1890 ஆம் ஆண்டு மடலாயமாக சாந்துக்கட்டினால் மூலஸ்தானம் அமைத்து வழிபாடுகள் செய்து வந்தனர். ஆனி மாத பூரணைக்குப் பிறகு சனிக்கிழமை அன்று மடை போட்டு பொங்கல் பூசை செய்து நடைபெற்று வந்த வேள்வி 1952 முதல் நிறுத்தப்பட்டதாக இவ் ஆலைய வரலாறு அமைந்துள்ளது. 2006ஆம் ஆண்டு தொடக்கம் மாசி மகத்தை இறுதியாகக் கொண்டு 15 நாட்கள் மகோற்சவமும், பின் 5 நாட்கள் அலங்கார உற்சவமும் நடைபெற்று வருகிறது.