நிறுவனம்:யாழ்/ காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் கோயில்

From நூலகம்
Name யாழ்/ காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place காரைநகர்
Address காரைநகர், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வாரிவளவு கற்பக விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரின் மேற்கு வீதியில் வாரிவளவு எனும் பதியில் உள்ள குப்பரைப்புலத்தில் அமைந்துள்ளது. 1880ஆம் ஆண்டு சுப்புட்டையார் பரம்பரையினால் மண்கோயில் அமைத்து மூலவராக விநாயகப் பெருமானை வைத்து வழிபட்டு வந்த இவ் ஆலயம் காலப்போக்கில் சீமெந்தால் கட்டப்பட்ட மண்டபங்களாக மாற்றம் அடைந்துள்ளது.

மகோற்சவம் தமிழ்ப் புத்தாண்டை இரதோற்சவமாகக் கொண்டு பத்துநாள் நடைபெறும். 1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு பின்பு 1997 ஆம் ஆண்டு ஆவணி மாதம் அந்தரித பிரதிஷ்டா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 215-220