நிறுவனம்:யாழ்/ காங்கேசன்துறை மகாவித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ காங்கேசன்துறை மகாவித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place காங்கேசன்துறை
Address காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

காங்கேசன்துறை மகாவித்தியாலயமனது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்திலுள்ள காங்கேசந்துறையில் அமைந்துள்ளது. கனகரத்தின வள்ளலின் கொடைச்சிறப்பால் பெற்ற நிலப்பரப்பில் கால்கோள் செய்யப்பட்ட இப் பாடசாலையின் தாபகர் டி.எஸ்.சான்டேஸ் ஆவார்.

சர்வதேச மொழியான ஆங்கில மொழிக்கு ஆரம்பத்திலிருந்தே இவ் வித்தியாலயம் முக்கியத்துவம் அளித்து வந்தது. ஆரம்பதில் அமெரிக்க மிஷன் என்ற பெயரைக் கொண்டிருந்து பின்னர் ஆங்கில மகாவித்தியாலயம் என்ற பெயரை தரமுயர்வுடன் 1967ஆம் ஆண்டு பெற்றது. மேலும் பாடசாலை நீங்கியோர்க்கான தொழில்நுட்ப பயிற்சி நெறியாகப் புடவையும் உடயமைத்தலும் நடைபெற்றது. இதனை நடைமுறைப்படுத்திய பெருமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. இராமநாதன் அவர்களையே சாரும். 1980களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளால் இப்பாடசாலை இடம்பெயர்விற்குள்ளாகியது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 62-63