நிறுவனம்:யாழ்/ இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place இளவாலை
Address இளவாலை வடக்கு, இளவாலை, யாழ்ப்பாணம்.
Telephone
Email
Website

இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் இளவாலை பிரதேசத்தில் அமைந்துள்ளது. அன்றைய காலக்கட்டத்தில் அந்நியரின் ஆட்சியில் கல்லூரிகள் அனைத்தும் சமய ஆட்சியில் இயங்கின அத்தோடு ஏழைக் குழந்தைகள் இப் பாடசாலைகளை எட்டியும் பார்க்க முடியாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் 19922ஆம் ஆண்டு இளவாலை பதி எனப்படும் அமபலவாணர் பதியில் இப் பாடசாலை உதயமானது. இராசரத்தினம் அவர்கள் ஆசிரியராகவும், சிதம்பரம்பிள்ளை அவர்கள் தலமையசிரியராகவும், கனகநாயகம், பஞ்சாட்சர ஐயர் ஆகியோர் உடனாசிரியர்களாகவும் இங்கு பணியாற்றினர்.

1926ஆம் ஆண்டில் இராசரத்தினம் அவர்களின் முயற்சியால் சைவ வித்தியாவிருத்திச் சங்க முகாமையில் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக இது பதிவு செய்யப்பட்டது. இப் பாடசாலையின் பதிவுப் பெயர் தெல்.வடமேற்கு தமிழ் கலவன் பாடசாலை ஆயினும் தெல்.வடமேர்கு மெய்கண்டான் வித்தியாலயம் என்ற பெயரே பெருவழக்கில் என்றும் நிலைத்து நின்றது.

1935ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப் பாடசாலை கனிட்ட இடைநிலைப் படசாலையாக தரம் உயர்ந்தது. பின்னர் படிப்படியாக ஆண்டுக்கொரு வகுப்புயர்ந்து 1939ஆம் ஆண்டில் சிரேஷ்ட பாடசாலையாக தரமுயர்ந்தது. அதுமட்டுமல்லாமல் இப் பாடசலை மாணவர்கள் பல விளையாட்டுப் போட்டிகளிலும் தனது திறமையைக் காட்டினர். 12.10.1978ஆம் ஆண்டு இப் பாடசலையின் பொன் விழாக் கொண்டாடப்பட்டது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 97-101