நிறுவனம்:யாழ்/ இணுவில் காரைக்கால் சிவன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ இணுவில் காரைக்கால் சிவன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place இணுவில்
Address இணுவில், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website www.inuvilsivan.weebly.com/

காரைக்கால் சிவன் கோயில் (விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதப் பெருமான் ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவில், கோண்டாவில் எனும் ஊர்களின் நடுவே அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் சோழ மன்னனால் ஆரம்பிக்கப்பட்ட காரைக்கால் ஆலயம் விஸ்வநாதப் பெருமாளையும், விசாலாட்சியம்பாளையும் மூலவர்களாகக் கொண்டது.

மூலக் கருவறையில் ஆறடி உயரமும் ஏறக்குறைய 10 அடி சுற்றளவும் கொண்ட, நான்கு திசைகளிலும் உருவத் தோற்றங்களும் தெரியக்கூடியதாக ஒரே பெரிய கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டதான லிங்கத் திருவுருவம் காணப்படுகிறது. இலங்கையில் இவ் ஆலயத்தில் மட்டுமே பஞ்சலிங்க மூர்த்தம் அமையப்பெற்றுள்ளது. 1940ஆம் ஆண்டளவில் மருதனார்மட இராமநாதேஸ்வரர் கோயிலை வடிவமைப்பதற்காக வந்த சிற்பிகளால் இதன் முன் பக்கம் புலித்தோலில் சிவபிரான் அமர்ந்து தவம் செய்யும் கோலத்தில் அழகாக மெருகூட்டப்பட்டது.

இவ் ஆலயத்தை சூழவும் மூலிகை மரங்கள், பழ மரங்கள், நிழல் மரங்கள், தெய்வீக மரங்கள் என 1008 பயன்தரு மரங்களும், தீர்த்தக் கிணறுகள் உட்பட ஏழு வற்றாத குளங்களும் இருந்தன. இவ் ஆலயத்தில் ஆடி மாதத்தில் கொடியேற்றத்துடன் கூடிய 12தினங்கள் மகோற்சவ திருவிழா இடம்பெறுகின்றன.


Resources

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 89-95