நிறுவனம்:யாழ்/ அளவெட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
From நூலகம்
Name | யாழ்/ அளவெட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை |
Category | பாடசாலைகள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | அளவெட்டி |
Address | அளவெட்டி தெற்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
அளவெட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது யாழ்ப்பாண மாவட்டத்தின் அளவெட்டி தெற்கில் அமைந்துள்ளது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களினால் 1937ஆம் ஆண்டு தை மாதம் 20ஆம் திகதி 15 மாணவருடன் இப் பாடசாலை ஆரம்பமானது.
என்.எஸ்.சாமுவேல் அவர்களின் பரிந்துரையின் பேரில் 1938ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 14ஆம் திகதி இது உதவி நன்கொடைப் பெறும் ஆரம்பப் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. ஆரம்பகாலத்தில் அளவெட்டி தெற்கு புனித செபஸ்தியான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் செபஸ்தியார் ஆலயத்தில் இயங்கி வந்த இப் பாடசாலை காலக்கிரமத்தில் தனியான தற்காலிக இடத்தை தனதாக்கி கொண்டு இப் பாடசாலை உருவானது.
Resources
- நூலக எண்: 13940 பக்கங்கள் 111-112