நிறுவனம்:யாழ்/ அளவெட்டி கும்பழாவளை விநாயகர் கோயில்

From நூலகம்
Name யாழ்/ அளவெட்டி கும்பழாவளை விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அளவெட்டி
Address அளவெட்டி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

அளவெட்டி கும்பழாவளை விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். மாருதப்புரவீகவல்லி எனும் பெயருடைய சோழ அரசிளங்குமாரி குதிரை முகம் நீங்கி பிரதிஷ்டை செய்த ஏழு ஸ்தலங்களில் மத்தியஸ்தலமே கும்பழாவளை. இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லியின் வருகைக்கு முன்னரே இருந்தது என்பது ஐதீகம். 1811 ஆம் ஆண்டளவில் கும்பழாவளையில் ஆலயக் கர்ப்பக்கிரகமும் மகாமண்டபமும் கட்டப்பெற்றன. 1847 ஆம் ஆண்டு எழுதப்பட்ட தோம்பில் இவ்வாலய மூலஸ்தானம் கற்களால் கட்டப்பட்டு ஓலையால் வேயப்பட்டது என கூறப்பட்டுள்ளது.