நிறுவனம்:மோட்டுக்காட்டுத் தெய்வம் வேடர் வழிபாட்டிடம்

From நூலகம்
Name மோட்டுக்காட்டுத் தெய்வம் வேடர் வழிபாட்டிடம்
Category சடங்கு மையம்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place யக்குரே
Address யக்குரெ, களுவன்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
Telephone 0741278875
Email -
Website -


இலங்கையின் கரையோர வேடர் என்போர் தீவின் கிழக்குக் கரையோரமாக இன்று வரைக்கும் வாழ்ந்து வருகின்றனர். அவர்தம் இருப்புக்கு இன்றும் மாறாத உதாரணமாய் விளங்குவன அவர்கள் பின்பற்றி வருகின்ற சடங்கு நடவடிக்கைகள் தாம். அவ்வாறான பண்பாட்டுக் கூறுகள் இன்றும் நிலைத்து நிற்கும் பெரு நிலப்பரப்பான “யக்குரே” எனும் சிற்றூரிலே தான் மோட்டுக் காட்டுத்தெய்வத்தினை பிரதானமாகக் கொண்ட இச்சடங்கு மையம் காணப்படுகின்றது. இது வேடர்களில் தொல் பெருங்கிராமமான களுவன்கேணிக் கிராமத்துடன் இணைந்ததாகவே அடையாளப்படுத்தப் படுகின்றது. இச்சடங்கு மையமானது பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் பேணப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் ஆரம்ப காலத்தில் இருந்து யட்டா, கல்கொட்டா, பரமன், சின்னத்தம்பி, கந்தவனம், ஆறுமுகம் ஆகியோர்களால் பேணப்பட்டு வந்து, தற்பொழுது ஏழாவது தலைமுறையாக நிமலன் என்பவரால் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சடங்கு மையமானது தற்காலத்தின் நவீன மாற்றத்தினை உட்வாங்கிக் கொண்டதாகவே தற்பொழுது காணப்படுகின்றது. அவ்வகையில் சடங்கு ஆற்றுகை முறையில் சிற்சில கலப்பும், பரிவாரங்களில் பந்தல் அமைப்பானது மரத்தடிகளுக்குப் பதிலாக கட்டிட வடிங்களும், மின்சார பாவனை, தமிழர் கிராமிய தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் என்பவும் இங்கு காணப்படுகின்றன. வேடர் வழிபாட்டு முறைகள் மற்றும் தமிழர் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் இங்கு ஒரே சேரக்காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.