நிறுவனம்:முல்/ ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில்

From நூலகம்
Name முல்/ ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place ஒட்டுசுட்டான்
Address ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
Telephone
Email
Website

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயமானது முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியானது யாராலும் உருவாக்கப்படாமால் தானே தோன்றியதாக நம்பப்படுவதனால் தான்தோன்றீஸ்வரம் என்றழைக்கப்படுகின்றது. 1998இல் இடம்பெயர்ந்த மக்கள் 2000 ஆம் ஆண்டில் மீள்குடியேறிய பின்பு சிதைவடைந்திருந்த கோயிலானது புனருத்தாரணம் செய்யப்பட்டு 2005 ஜூலை 13 இல் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இக் கோயிலின் இறைவன் பெயர் ஒட்டுசுட்டான் தாந்தோன்றியீச்சரர் ஆவார். எரித்த குரக்கன் ஒட்டுவேகவில்லை என்பதனால் வேகாவனமுடையார் என்னும் காரணப் பெயரும் இவருக்கு உள்ளது. இறைவி பெயர் பூலோகநாயகி. இக்கோயிலின் தலவிருட்சம் கொன்றைமரம் ஆகும்.

வெளி இணைப்பு