நிறுவனம்:பத்தினித் தெய்யோ (அம்மன்) வேடர் வழிபாட்டிடம்

From நூலகம்
Name பத்தினித் தெய்யோ (அம்மன்) வேடர் வழிபாட்டிடம்
Category சடங்கு மையம்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place களுவன்கேணி
Address களுவன்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
Telephone 776885462
Email -
Website -

பத்தினித் தெய்யோ(அம்மன்) வேடர் வழிபாட்டிடமானது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வேடர்களின் தொல்கிராமமான களுவன்கேணி எனும் கிராமத்தின் அமைந்துள்ளது. இது இக்கிராமத்தின் ஆரம்ப கட்ட வழிபாட்டு மையங்களுள் ஒன்றாகக் காணப்பட்டுள்ள அதே வேளை, தற்போதுள்ள அமைவிடத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். கிடைக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையில் இச்சடங்கு மையத்தினை ஆரம்பத்தில் குடற்புரி ஆச்சி எனும் பெண்மணி ஒருவர் பராமரித்து வந்துள்ளார். பின்னர் அவரது வழிவந்தவர்களான முடமாரியர், வெள்ளக்குட்டி, கண்மணி என்போர் பராமரித்து வர அவர்களின் வழிவந்தவரான கிருஸ்ணப்பிள்ளை என்பவர் தற்போது பராமரித்து வருகின்றார். இவருக்குப் பின்னர் கிருஸ்ணப்பிள்ளையின் மூத்தமகனான கிருஸ்ணகுமார் என்பவர் எதிர்காலப் பராமரிப்பிற்காக ஆயத்தமாக இருக்கின்றார். இச்சடங்கு மையமானது கிருஸ்ணப்பிள்ளை என்பவரின் பொறுப்பிற்கு வரும் வரைக்கும் வேரடர் முறைப்படியான சடங்கு வழிபாட்டு முறைகளையே முழுவதுமாக பின்பற்றி வந்த போதும், தற்போது சிற்சில மாற்றங்களுக்கு உள்ளாகியும், உட்பட்டும் கொண்டும் வருகின்றது. அவ்வகையில் தமிழர்களின் கிராமிய வழிபாட்டு முறைகள், கட்டட அமைப்புக்கள் என்பனவும் இச்சடங்கு மையத்துடன் பின்னிப்பிணைந்ததாகவே இன்றளவில் காணப்படுகின்றன. என்னதான் கால மாற்றங்களுக்கு உட்பட்டாலும், வேடர்களுக்கான சடங்கு சார் பண்பாட்டசைவுகளுக்கு இதுவோர் சிறந்த உதாரணமாகவே இன்றளவும் காணப்படுகின்றது.