நிறுவனம்:நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கம்

From நூலகம்
Name நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கம்
Category அமைப்பு
Country இலங்கை
District திருகோணமலை
Place நல்லூர்
Address நல்லூர், மூதூர், திருகோணமலை
Telephone 0768129735
Email -
Website -


நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்கமானது கிழக்கு மாகாணத்தில் கரையோர வேடர்கள் செறிந்து வாழும் மூதூர் பிரதேசத்திற்குள் உட்பட்ட நல்லூர் எனும் கிராமத்தினை மையமாகக் கொண்டு கடந்த 13 வருடங்களாக இயங்கி வருகின்றது. இதன் தலைவராக மார்க்கண்டு வேலாயுதம் என்பவரும், செயலாளராக முத்தையா முருகேஸ்வரன் என்பவரும், பொருளாளராக நடராசா கனகரெத்தினம் என்பவரும் காணப்படுகின்றனர். இவ்வமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இற்றை வரைக்கும் நல்லூர் கிராம பூர்வகுடிகளின் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு, தமது சமூகம் சார்ந்த உரிமைகள் மற்றும் அனைத்து வகை ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் திறம்பட குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றது.