நிறுவனம்:தெய்யநாச்சி வேடர் வழிபாட்டிடம்

From நூலகம்
Name தெய்யநாச்சி வேடர் வழிபாட்டிடம்
Category சடங்கு மையம்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place சேனைக்கண்டம்
Address சேனைக்கண்டம், களுவன்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
Telephone -
Email -
Website -


கிழக்கு மாகாணத்தில் தான் இன்றுவரைக்கும் தமிழ் மொழியினைப் பேசுகின்ற கடலோர வேடர்கள் எனும் வேடக்குழுமத்தினர் காணப்படுகின்றர். கிழக்கு மாகாணம் என்பது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களினை உள்ளடக்கிய பகுதியாகும். அவ்வகையில் பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் இன்றும் பெரும் பகுதியில் இம்மக்கள் வாழ்கின்றனர். அவ்வாறான வேடர் தொல் கிராமங்களுள் ஒன்றான ‘சேனைக்கண்டம்’ எனும் ஊரை மையாமாகக் கொண்டுதான் குறித்த தெய்யநாச்சி வழிபாட்டிடமானது காணப்படுகின்றது. இது நடராசா என்பவரினாலேயே தற்போதைய இடத்தில் மையங்கொள்ள வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னற் இவருடைய மூதாதையர்களினால் தளவாய் உள்ளிட்ட பல கரையோர கிராமங்களில் ஆராதிக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது இதச்சடங்கு மையத்தின் பிரதான கப்புறாளையாக நடராசா என்பவரின் மகள் ஜெயராணி எனும் பெண் காணப்படுகின்றார். இங்கு அச்சடங்கு நடைமுறைகள் அனைத்தும் எதுவித நவீனக்கலப்போ, பார்ப்பனீய உள்ளீடோ இல்லாமல் வருடத்திற்கொரு முறை சடங்கு நிகழ்வு இடம் பெற்று வருகின்றது. இங்கு இடம் பெறுகின்ற நோய்நீக்கல் மற்றும் குணமாக்கல் நடவடிக்கைகளின் போது எதுவித சன்மானமும் பெறப்படாத தொன்று தொட்ட பழக்க நடைமுறையே பின்பற்றப்படுகின்றமையும் தனித்துக்குறிப்பிடத்த அம்சமாகும்.