நிறுவனம்:திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம்

From நூலகம்
Name திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம்
Category பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம்
Country இலங்கை
District திருக்கோணமலை
Place திருக்கோணமலை நகரம்
Address திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம், திருக்கோணமலை
Telephone 0262222036
Email
Website


திருக்கோணமலையின் மிகப் பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புனித சூசையப்பர் கல்லூரி 1867 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி வணக்கத்திற்குரிய LOUIS MARY KEATING O.M.I எனும் பாதிரியாரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாடசாலை ஆகும்.

இந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் திருக்கோணமலை மாவட்டத்தை பொருத்தவரை மிக பழமை வாய்ந்த ஒரு பழைய மாணவர் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலையுடன் இணைந்து இயங்கும் ஒரு அமைப்பாகவே பழைய மாணவர் சங்கம் காணப்படுவதுடன், பாடசாலையின் சின்னம், கொடி, கீதம் என்பன பழைய மாணவர் சங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விடயங்களாக காணப்படுகின்றது.

குறித்த பழைய மாணவர் சங்கத்தின் கிளைகளாக கனடா மற்றும் இங்கிலாந்து சங்கங்கள் காணப்படுவதுடன் தாய் சங்கமாக திருக்கோணமலையில் காணப்படும் பழைய மாணவர் சங்கமே உள்ளது. பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளராக பதவி வழியில் திருக்கோணமலை மறை மாவட்ட ஆயர் காணப்படுகின்றார்.

பாடசாலை அதிபர் பதவி வழியில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக காணப்படுவதுடன், அவரின் கீழ் மதிப்பார்ந்த பொதுச் செயலாளர், உபசெயலாளர், மூன்று உப தலைவர்கள், பொருளாளர், விளையாட்டுக்கு பொறுப்பான செயலாளர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோரும், ஆக குறைந்தது பத்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். தேவைகளின் அடிப்படையில் உறுப்பினர்களை எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் இடம்பெற வேண்டும் என்பதுடன் ஒரு சங்கத்தின் ஆயுட்காலம் ஒரு வருடமே ஆகும். உப தலைவர்கள் விசேட தன்மையின் அடிப்படையில் கல்வி, விளையாட்டு எனும் விடயங்கள் தொடர்பில் விசேடமாக நியமிக்கப்படலாம். குறித்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கல்லூரி செயற்பாடுகளுக்கு மிகவும் ஒத்துழைப்புடன் இயங்குவதுடன், பாடசாலை நிர்வாகத்தில் அளவுக்கு அதிகமான தலையீடுகளை மேற்கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழைய மாணவர் சங்கத்திலிருந்து மதிப்பார்ந்த பொதுச் செயலாளரும், ஒரு உறுப்பினரும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்குள் பதவி அடிப்படையில் உள்வாங்கப்படுவதுடன், பழைய மாணவர் சங்கத்திற்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கும் இடையில் ஒருங்கிணைப்பாளர்களாக காணப்படுவார்கள்.

பழைய மாணவர் சங்கத்திற்கென்று விசேடமான வங்கி கணக்கு ஒன்று காணப்படுவதுடன், நிதி கையாளுகை தொடர்பு பாடசாலை அதிபர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொறுப்புடையவர்களாக காணப்படுவார்கள். பழைய மாணவர் சங்கத்திற்கான நிதிப் புலன்களாக பழைய மாணவர்கள் ஊடாக வழங்கப்பட நேரடியான நிதிகளும், நன்கொடைகளும், மேலும் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளின் ஊடாக சேர்க்கப்படும் நிதியும் காணப்படுகின்றது.