நிறுவனம்:திரு/ வெருகல் சித்திரவேலாயுதர் கோயில்

From நூலகம்
Name திரு/ வெருகல் சித்திரவேலாயுதர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place வெருகல்
Address வெருகல், மாவடிச்சேனை, திருகோணமலை
Telephone
Email
Website


வெருகல் ஶ்ரீ சித்திரவேலாயுதர் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் மண்டூர் முருகன் கோயிலைப் போன்று 'சின்னக் கதிர்காமம்' என்று அழைக்கப்படுகின்றது. திருகோணமலைக்குத் தெற்கே 37 மைல் தூரத்திலும், மட்டக்களப்பு நகருக்கு வடக்கே 47 மைல் தூரத்திலும் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் இவ்வாலயம் உள்ளது. சித்திரவேலாயுதர் ஆலயத்தின் தென்புறம் கதிர்காமசுவாமி கோயில் உள்ளது. ஆதி காலத்தில் இப்பகுதிகளில் வாழ்ந்த வேடுவர்களால் இவ்விடத்தில் வழிபாடு நிகழ்த்தப்பட்டதாக மரபு வழிக் கதைகள் கூறுகின்றன. இருந்தபோதிலும் வெருகலம்பதி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களை நாம் 17 ஆம் நூற்றாண்டு முதலே பெற்றுக் கொள்ள முடிகின்றது.

'வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்' எனும் நூலும், கோயிலில் நடைபெற்ற திருப்பணி பற்றிய விடயங்களைக் கூறும் சாசனமொன்றும் வெருகலம்பதி பற்றிய ஆதாரபூர்வமான பழைய குறிப்புகளாகும். இச்சாசனம் 17 ஆம் நூற்றாண்டுக்குரியதென பேராசிரியர் சி. பத்மநாதன் கருதுகின்றார்.