நிறுவனம்:கொம்பு நாச்சி தெய்வம் வேடர் வழிபாட்டிடம்

From நூலகம்
Name கொம்பு நாச்சி தெய்வம் வேடர் வழிபாட்டிடம்
Category சடங்கு மையம்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place நெடியமடு
Address நெடியமடு, களுவன்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
Telephone 0774031735
Email -
Website -


இலங்கையின் கரையோர வேடர் என்போர் தீவின் கிழக்குக் கரையோரமாக இன்று வரைக்கும் வாழ்ந்து வருகின்றனர். அவர்தம் இருப்புக்கு இன்றும் மாறாத உதாரணமாய் விளங்குவன அவர்கள் பின்பற்றி வருகின்ற சடங்கு நடவடிக்கைகள் தாம். அவ்வாறான பண்பாட்டுக் கூறுகள் இன்றும் நிலைத்து நிற்கும் பெரு நிலப்பரப்பான “நெடியமடு” எனும் சிற்றூரிலே தான் மோட்டுக் காட்டுத்தெய்வத்தினை பிரதானமாகக் கொண்ட இச்சடங்கு மையம் காணப்படுகின்றது. இது வேடர்களில் தொல் பெருங்கிராமமான களுவன்கேணிக் கிராமத்துடன் இணைந்ததாகவே அடையாளப்படுத்தப் படுகின்றது. இச்சடங்கு மையமானது பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் பேணப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் இச்சடங்கு மையமானது வேடர்களிடம் காணப்படும் கல்கொட்டா குடியினருக்கும் மற்றும் பனுவளக்குடியினருக்கும் சொந்தமானதாகக் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இருந்து நீலாத்தை, கல்கொட்டா, கணபதிப்பிள்ளை, வைரமுத்து, முத்துவேல் ஆகியோர் தலைமுறை தலைமுறையாக இச்சடங்கு மையத்தினை வழி நடத்தி வந்துள்ளனர். தற்பொழுது அவர்களின் வழி வந்தவரான நாகராசா என்பவரே குறித்த சடங்கு மையத்தினை வழி நடாத்தி வருகின்றார்.

தற்கால நவீனமயமாக்கல் மற்றும் பார்ப்பனீய ஆதிக்கம் என்பன இவர்களின் பண்பாட்டு அசைவுகளில் குறுக்கிட்டாலும், இவ்வழிபாட்டு மையமானது சடங்கு நடவடிக்கை சார்ந்த சகல முறைமைகளிலும் பழமை பேணுவதென்பது இச்சடங்கு மையத்துக்கேயான தனிச்சிறப்பாகக் காணப்ப்படுகின்றது. அத்துடன் குறித்த கிராமத்தில் இன்று வரைக்கும் சகலவிதமான வழிபாட்டுக் குணமாக்கல் நடவடிக்கைகளையும் எதுவித சன்மானமும் பெறாமல் மேற்கொண்டும் வருகின்றது.