நிறுவனம்:குடா நீலி அம்மன் வேடர் வழிபாட்டிடம்

From நூலகம்
Name குடா நீலி (அம்மன்) வேடர் வழிபாட்டிடம்
Category சடங்கு மையம்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place களுவன்கேணி
Address களுவன்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
Telephone 0779176209
Email -
Website -


கிழக்குக் கரையோரம் எங்கும் வேடர் வழிபாடு காணப்பட்டாலும் களுவன்கேணி கிராமத்தின் வழிபாட்டு நடைமுறைகளுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. நவீன பண்பாட்டுத்தாக்கம், மதக்கோட்பாடுகள் என்பன வெகுவாகப் பாதித்துள்ள இன்றைய சூழலில் வேடர் வழிபாடுகளும் அதனை உள்ளாவாங்கி உள்ளது என்பது ஏற்கவேண்டுயதுதான். ஆனால் இவ்வழிட்டு மையமும் அதன் வழிபாட்டு முறைகளும் பழமை மாறாமல் , வழிபாட்டு முறைகளில் கூட கலப்பு இல்லாமல் கடைப்பிடிக்கப் படுகின்றன. இயற்கை முறையிலான அலங்கார முறைகள், உணவுப் பரிமாற்றங்கள், உடை ஒப்பனைகள், பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை எனும் பண்புக்கூறுகளுடன் இனிதே இச்சடங்கு மையமானது காணப்படுகின்றது. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்ட இச்சடங்கு மையமானது இன்று மீள ஆரம்பிக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் தேவர், கந்தியப்பர், குடற்புரி ஆச்சி, வீரர், கணபதி, காத்தமுத்து, அன்னப்பிள்ளை ஆகியோரால் ஏழு தலைமுறைகளாக இயக்கப்பட்டு வந்தது. பின்னர் அன்னப்பிள்ளை என்பவரின் இறப்பிற்குப் பின்னர் சுமார் 21 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்று எட்டாவது தலைமுறையாக அன்னப்பிள்ளை அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரும் இணைந்து மீள ஆரம்பித்து உள்ளனர். தற்போது சடங்கினை முன்னின்று நடாத்தும் கப்புறாளையாக குமாரசாமி சண்முகம் என்பவர் காணப்படுகின்றார்.