நிறுவனம்:கிளி/ முழங்காவில் ஸ்ரீ செல்வயோக சித்திவிநாயகர் ஆலயம்

From நூலகம்
Name முழங்காவில் ஸ்ரீ செல்வயோக சித்திவிநாயகர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place முழங்காவில்
Address முழங்காவில்
Telephone
Email -
Website -


முழங்காவில் பிரதேசத்தில் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் வழிப்போக்கர்களைால் ஒரு பிள்ளையார் சிலை வைத்து ஆதரிக்கப்பட்டு காலப்போக்கில் ஆலயமாகத் தோற்றம் பெற்றது. வடக்குத் தெற்காகப் பாதை இருந்து வந்தமையால் இவ்விநாயகர் மேற்குத்திசையைப் பார்த்த படி ஆகம விதிகளுக்கு உடபடாமல் அமைந்து காணப்படுகிறது. இவ் ஆலயத்திற்கு அருகே பழமை வாய்ந்த கிணறு விநாயகருக்கு அபிஷேகம் செய்ய முடியாதவாறு இருந்ததால் பூசகர் மனம் வருந்தியபோது மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததால் நன்னீர் ஊற்றாக மாறி இன்றுவரை வற்றாத புனித தீர்த்தமாக இருந்து வருகின்றது. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தமையாலே முழங்காவில் என இடுகுறிப்பெயர் கொண்டு இவ்வூர் அழைக்கப்பட்டதுடன் முழங்காவில் பிள்ளையார் கோவில் எனவும் அழைக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டில் விநாயகர் மூலஸ்தானம் கட்டப்பட்டு 1986 ஆம் ஆண்டின் பின் அதிகளவு நிதி கொண்டு புனர் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருக்கேதீஸ்வரம் செல்லும் அடியவர்களின் முதல் வணக்கத்தலம் என்பதுடன் திருக்கேதீஸ்வரம் சென்று திரும்பி வரும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஓர் ஆலயமாகவும் விளங்குகின்றது.