நிறுவனம்:கிளி/ பளை சோரன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள் ஆலயம்
From நூலகம்
| Name | கிளி/ பளை சோரன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள் ஆலயம் |
| Category | இந்து ஆலயங்கள் |
| Country | இலங்கை |
| District | கிளிநொச்சி |
| Place | பளை |
| Address | சோரன்பற்று,பளை, கிளிநொச்சி |
| Telephone | |
| Website |
பளை சோரன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் சோரன்பற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் பனங்காட்டு அம்மன் என்றும் அவ்வூர் மக்களினால்அழைக்கபடுவதுண்டு. அடர்ந்த பனைமரங்களின் மத்தியில், ஓலையால் வேயப்பட்ட சிறுகுடிசையில் கண்ணகை அம்பாள் எழுந்தருளியுள்ளமையால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. நெல்லு விளைவிக்கக்கூடிய பள்ளத்தாக்குப் பகுதி அம்பாள் வீற்றிருக்கும் இடம் என்பதாலேயே நெல்லிப்பள்ளம் எனக் காரணப் பெயரும் கூறப்படுகின்றது.