நிறுவனம்:கிளி/ சித்தன்குறிச்சி முருகன் ஆலயம்

From நூலகம்
Name சித்தன்குறிச்சி முருகன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place சித்தன்குறிச்சி
Address சித்தன்குறிச்சி, பூநகரி
Telephone -
Email -
Website -

இவ் ஆலயம் நல்லூர் கந்தசாமி கோவிலிலிருந்து தலயாத்திரையாக வருகை தந்திருந்த குழுவினரை சேர்ந்த சித்தர் ஒருவரால் கட்டப்பட்டதாக ஐதீகம் அருந்து வருகிறது. பூவரசங்குளம் என்ற குளத்திற்கு அருகில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் தலவிருட்சமாக மருது, வேம்பு என்பன காணப்படுகின்றன. இவ் ஆலயத்தின் ஆரம்பம் பிரித்தானியர் காலத்திற்கு முன்னதாக இருக்கும் என நம்பப்படுகிறது. சுண்ணாம்பினால் ஆன கட்டிடம் காணப்படுகிறது. மூலஸ்தானத்தில் வேல் அமைந்துள்ளது. இவ்வேலானது நல்லூர் கந்தசாமி கோவிலின் பீடத்திலுள்ள வேலுடன் ஒத்ததாகக் காணப்படுவதால் நல்லூர் கந்தசாமி கோவிலுடன் தொடர்பு நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது.