நிறுவனம்:கிளி/ இரணைமடு பறீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் (ஒற்றைக் கைப் பிள்ளையார்)

From நூலகம்
Name இரணைமடு பறீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் (ஒற்றைக் கைப் பிள்ளையார்)
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place வட்டக்கச்சி
Address அழகரத்தினம் வீதி வட்டக்கச்சி, கிளிநொச்சி
Telephone
Email -
Website -


1953 ஆம் ஆண்டு தொடங்கிய கிளிநொச்சியிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் வட்டக்கச்சி குடியேற்றக் கிராமத்தில் இரணைமடு குளம் அருகே இரணைமடு பறீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.

1956 ஆம் ஆண்டு ஆனி மாதம் இரணைமடு குளத்தின் புற்று ஒன்றிலிருந்து விநாயகர் உருவ சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மண்ணை வெட்டி எடுக்கும் போது அவரது ஒரு கை உடைந்து விட்டது, அதை பெரியோர் பாலை மரத்துக்கடியில் வைத்து ஆதரித்து வணங்கி வந்தனர். அத்துடன் மரத்தை சூழ உள்ள பற்றை காடுகளை வெட்டி துப்புரவு செய்து ஆலயத்திற்கு சிறு கொட்டகை அமைத்தனர்.

1958 ஆம் ஆண்டு இரணைமடு குளம் உடைத்து வட்டக்கச்சி பிரதேசம் வெள்ளத்தால் மிதந்தது. ஊர் மக்கள் ஒன்றிணைந்து ஆலயத்திற்கு சற்று தூரத்தில் வீதியை வெட்டி விட்டு ஊருக்கு தண்ணீர் வராமல் பிள்ளையாரை வணங்கினார்கள். கோவில் பிரதேசம் வெள்ளத்தால் மிதந்தது ஆனால் கோயில் விளக்கு மட்டும் அணையவில்லை. ஒளி விட்டு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை கண்டு ஊர் மக்கள் பெரும் வியப்படைந்தனர். ஒற்றைக்கை பிள்ளையார் தான் தங்களை காப்பாற்றி உள்ளார் என்று அன்று மக்களால் வழங்கப்பட்ட பெயர் இன்றும் நிலைத்து நிற்கின்றது. அதன் பின் ஆலய கட்டட வேலைகள் நிறைவேற்றப்பட்டு 1989 ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் இடம் பெற்றது. அதன் பின் இரண்டாவது கும்பாபிஷேகம் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்றது. பின்னர் உள்நாட்டு யுத்தம் மக்களை உலுக்க தொடங்கியது. மக்கள் இடம்பெயர தொடங்கினர் இடப்பெயர்வின் பின்னர் ஆலய அமைப்புக்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டும், திருத்தப்பட்டும் பரிவார தெய்வங்களுடன் 2017-06-30 ஆம் திகதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவராத்திரி, திருவெம்பா, பிள்ளையார் கதை, நவராத்திரி, பிள்ளையார் சதுர்த்தி என்பது சிறப்பாக நடைபெறுகிறது. இவ் ஆலயத்தில் இரு வேளை பூஜை நடைபெறுகிறது. அதாவது காலை 8 மணி மாலை 6 மணி பூஜை நடைபெறுகிறது. இவ்வாலயத்தின் மூல தெய்வமாக கணபதி காணப்படுகின்றது.