நிறுவனம்:அம்/ ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம்

From நூலகம்
Name ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address ஶ்ரீ நாகதம்பிரான், கல்முனை, அம்பாறை
Telephone -
Email -
Website -


ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1955ம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாலயம் கல்முனை ஒல்லிக்கேணி எனும் இடத்தில் த. மார்க்கண்டு என்பவரால் உருவாக்கப்பட்டது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அவ்வேளை கடமை புரிந்த மார்க்கண்டு என்பவர் சிறிய காடுகளால் சூழப்பட்ட ஒல்லி நீர்த்தாவரங்கள் நிறைந்த கேணியொன்றில் இவ்வாலயத்தை ஓலைக் குடிசையாக அமைத்து வழிபட்டு வந்துள்ளார்.

சிறிது காலஞ்செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் ஆலயத்தை நிலையான கட்டிடமாக நிறுவ வேண்டுமெனவும், நிலப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கேணியின் ஒரு பகுதியை மூடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வேளையில் 1980ம் ஆண்டு மார்க்கண்டு அவர்கள் இறைபதமடைய அதனை சேதுப்பிள்ளை சீனித்தம்பி என்பவர் பராமரித்து வந்தார்.

இவர் ஏனைய பக்தர்களுடன் சேர்ந்து ஆலயத்திற்கு நிரந்தர கட்டிடமொன்றை அமைக்கும் நோக்குடன் புதிய நிர்வாகமொன்றை தெரிவு செய்தார். புதிய நிர்வாகம் மூன்று வேளைப் பூசைகளை ஒழுங்காகச் செய்து வந்தது. அவ்வேளையில் 1990ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரச் சூழலினால் இவ்வாலயம் சேதமாக்கப்பட்டது. சில மாதங்களின் பின் ஆலயத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட மக்கள் அதன் பணிகளை நிறைவு செய்தனர்.

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் ஆலயம் முற்றாகச் சேதமடைந்தது. அதன் பின்னர் ஒன்று கூடிய மக்கள் திருப்பணிச் சபையை உண்டாக்கி மீண்டும் ஆலய கட்டுமாணப் பணிகளை ஆரம்பித்தனர். அனைவரது முயற்சியாலும் எல்லாப்பணிகளும் நிறைவுபெற்று 2023ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.