நிறுவனம்:அம்/ திருக்கோவில் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
Name | திருக்கோவில் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | திருக்கோவில் |
Address | திருக்கோவில், அம்பாறை |
Telephone | - |
- | |
Website | - |
ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் மொனராகலை, திஸ்ஸமகராம போன்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களால் 1978ம் ஆண்டு காலப்பகுதியில் வணங்குவதற்காக அமைக்கப்பட்டது. மலையகப் பெண் தெய்வ வழிபாட்டுக்கு அமைவாக கரகம் பாலித்தல் முதலான சடங்கு முறைகளோடு வருடத்துக்கு ஒரு முறை திருக்கதவு திறத்தலுடன் ஒரு நாள் திருவிழாவும் எட்டாம் நாள் வைரவர் பூசையும் நடைபெற்றது.
2006ம் ஆண்டு காலப்பகுதியில் புதிய நிர்வாகத் தெரிவு இடம் பெற்று தற்போது நடைமுறையில் உள்ள நிர்வாகசபை ஆலயத்தைப் பொறுப்பேற்றது. அதன் பின் கிழக்கு மாகாணத்திற்கான பெண் தெய்வ வழிபாட்டுச் சடங்கு விதிகளுக்கு அமைவாக திருவிழா நடைபெற்றது.
தற்போதைய திருவிழா முறையானது மூன்று நாட்களுக்கு இடம்பெறுகின்றது. முதல் நாள் அதிகாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பித்து இரவு உள்வீதி ஊர்வலத்துடன் நிறைவு பெற்று இரண்டாம் நாள் அம்மனின் அலங்காரத் தேரிலான கிராமப் பிரவேசம் இடம்பெறும். மூன்றாம் நாள் இரவு திருக்குளிர்த்தி உற்சவமும் எட்டாம் நாள் வைரவர் பூசையும் நடைபெற்று குறித்த ஆண்டுக்கான திருவிழா நிறைவு பெறும்.