நிறுவனம்:அம்/ திருக்கோவில் ஶ்ரீ மங்கைமாரியம்மன் ஆலயம்

From நூலகம்
Name திருக்கோவில் ஶ்ரீ மங்கைமாரியம்மன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place திருக்கோவில்
Address திருக்கோவில், அம்பாறை
Telephone -
Email -
Website -


ஶ்ரீ மங்கைமாரி அம்மன் ஆலயம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் கந்தபாணந்துறை எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட பிரதேசமாக திருக்கோவில் இருந்துள்ளது. ஆரம்ப காலத்தில் இப்பிரதேச மக்கள் சிலர் தோட்ட வேலை செய்யும் காலத்தில் வேலைக்காக ஓர் பற்றைக்குள் கொத்துப் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு அதனுள் ஓர் அம்மன் சிலை இருப்பதைக் கண்டுபிடித்தனர். இவர்கள் அந்தச் சிலையை பேணி உரிய முறையில் பாதுகாத்து வந்தனர்.

இந்த அம்மன் சிலையும் தெய்வ அம்சம் பெற்றதாக உயர்ந்து காணப்பட்டது. இதனை அறிந்து இந்த காணியின் சொந்தக்காரரான மார்க்கண்டு முதலாளி செங்கல்லால் ஓர் சிறிய ஆலயத்தை தனது காணியில் கட்டுவித்து அதனுள் அம்மன் சிலையையும் வைத்து அனைவரும் வழிபடத்தக்க ஓர் வழிபாட்டுத் தலமாக அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம் மக்களிடையியே மங்கைமாரி அம்மன் வழிபாடு தொடங்கப்பட்டது.

பின்னர் தோட்ட வேலைக்காக நியமிக்கப்பட்ட யானையைக் கொண்டு முதலாவது ஆலயத் திருவிழா நடாத்தப்பட்டது. மேலும் ஆரம்பகாலத்தில் வைகாசிப் பூரணை தினத்தன்றே கண்ணகி அம்மன் ஆலயக் குளிர்த்தியும் மங்கைமாரி அம்மன் ஆலய குளிர்த்தியும் ஒன்றாக நடாத்தப்பட்டது.

இதனால் ஆலயங்களுக்கு மக்கள் செல்வதில் சிக்கல் தன்மை இருந்ததால் இவ்வாலயக் குளிர்த்தியை ஆனிப்பூரணைக்கு மாற்றம் பெற்றது. இவ்வாறு ஆலயம் சிறிது சிறிதாக வளிர்ச்சியடைந்த ஆலயம் 1918ம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகமும் அதன் பின் 17 வருடங்களின் பின்னர் 1935ம் ஆண்டே இடம்பெற்றது. அதன் பின் இரண்டாயிரம் ஆண்டுகளில் தொடர்ச்சியான முறையில் இடம்பெறுகிறது.